Connect with us

latest news

Siragadikka Aasai: கிரைம் லிஸ்ட் ஏறுதே மீனா… கோபமாகும் முத்து… ஜாலியாக போகும் விஜயா!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

சீதா மற்றும் அருணை ரிஜிஸ்டர் ஆபிஸ் அழைத்து வரும் மீனா ஏற்பாடுகளை செய்து ஐய்யரை வைத்து மந்திரம் சொல்ல வைத்து இருவருக்கும் திருமணத்தினை முடித்து சாட்சி கையெழுத்து போட்டு விடுகிறார். பின்னர் அருண் மற்றும் சீதா புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.

அந்த நேரத்தில் முருகனுடன் அதே அலுவலகத்துக்கு வரும் முத்து உள்ளே அதிகாரியை பார்க்க வேண்டும் எனக் கேட்டு உள்ளே செல்கிறார். அப்போ ஒருவர் முத்துவிடம் பேசும் போது மீனா, சீதா, அருண் வெளியேறி விடுகின்றனர். மீனா மீண்டும் அலுவலகம் வர அங்கு முத்துவை பார்த்து அதிர்ந்து நிற்கிறார்.

நீ எங்க இங்க இருக்க எனக் கேட்க ஒருத்தருக்கு மாலை கொடுக்க வந்தேனே. அதான் என்கிறார். ஓ அந்த மந்திரம் சத்தமெல்லாம் கேட்டுச்சே அதுவா எனக் கேட்க ஆமாம் என்கிறார். பின்னர் இருவரும் கிளம்பி விடுகின்றனர்.

மறுபக்கம் மீனா வீட்டில் சத்யா பாஸ் செய்ததற்காக தடபுடலாக விருந்து கொடுக்கிறார். மீனா மற்றும் முத்து ஒன்றாக வர இந்திரா இதெல்லாம் எதற்கு எனக் கேட்கிறார். லைஃபில ஒருமுறை தான் இதெல்லாம் அனுபவிக்கலாம் என்கிறார். வந்தவர்கள் முத்து மாதிரி மாப்பிள்ளை கிடைச்சதுக்கு கொடுத்து வைக்கணும் என்கிறார்கள்.

மீனா தன்னுடைய அப்பா படத்துக்கு முன் நான் தப்பு செஞ்சா மன்னிச்சிடுங்கப்பா. சீதாவோட வாழ்க்கை போக கூடாதுனு தான் இப்படி செஞ்சேன் என்கிறார். பின்னர் விருந்து நடக்கிறது. அப்போ ஒருவர் இதெல்லாம் நல்லா செய்றீயே. ஆனா சீதா வாழ்க்கையில் பிடிவாதம் காட்றீயே என்கிறார்.

முத்து சாப்பாடுக்கே அவ்வளோ யோசிக்கிறோம். அதுபோல வாழ்க்கைக்கு எவ்வளோ யோசிக்கணும் எனப் பேசிக்கொண்டு இருக்க சீதா மற்றும் மீனா இருவரும் ஒன்றும் பேச முடியாமல் முழித்துக்கொண்டு இருக்க சீதாவை மாமா பாத்த பையனை கட்டிப்பேனு சொல்லு என முத்து கேட்கிறார். இதில் சீதா அழுக தொடங்குகிறார்.

Continue Reading

More in latest news

To Top