Connect with us

விஜய், அஜித் ரேஞ்சுக்கு பில்டப்…! சூர்யாவின் சரிவுக்கு இதுதான் காரணமா?

latest news

விஜய், அஜித் ரேஞ்சுக்கு பில்டப்…! சூர்யாவின் சரிவுக்கு இதுதான் காரணமா?

10 வருடங்களாகவே சூர்யாவோட படங்கள் வணிகரீதியாக வெற்றி அடையவில்லை. ஜெய்பீம், சூரரைப் போற்று படங்கள் டைரக்ட் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. பிரமாதமான படங்கள். வரவேற்புக்குள்ளானது. ஆனால் வணிகரீதியாக வெற்றி அடையவில்லை.

சமீபத்தில் வெளியான கங்குவா படம் மிகப்பெரிய பிளாப். பில்டப்போ அதிகம். ரெட்ரோ படமும் பெரிய லாபம் இல்லை. பிளாப் ஆகுற படங்களோட செகண்ட் பார்ட் எடுக்க மாட்டாங்க. பாகுபலி படத்தை முதலில் 2 பாகமாக எடுக்கணும்னு எண்ணமே இல்லை.

ஆனால் முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து அந்தப் படத்தின் 2ம் பாகம் வெளியானது. கங்குவா படம் வெற்றி அடைந்து இருந்தால் அதன் 2ம் பாகத்தை எடுத்து இருப்பார்கள். அயலான் படமும் அப்படித்தான். பெரிய பட்ஜெட் என்றதும் செகண்ட் பார்ட்டுக்கு லீடு கொடுத்தாங்க. ஆனா இப்போ வரை அந்த புராஜெக்ட் நடக்கவே இல்லை.

வாடிவாசல் படம் சூர்யாவுக்கு எந்த காலத்திலும் கிடையாது. அது டிராப். தனுஷ் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கு. அவரும் அதுக்கு ஓகே சொல்லி இருக்கிறார். வாடிவாசல் வந்தபிறகுதான் சூர்யா மிஸ் பண்ணிட்டாரா? எஸ்கேப் ஆகிட்டாரான்னு தெரியும். வணங்கானைப் பொருத்தவரை சூர்யா எஸ்கேப் ஆகிவிட்டார்.

ஒருவேளை அவர் படத்தில் நடித்திருந்தால் அவருக்காகக் கொஞ்சம் கதை மாறி இருக்கும். அப்படி நடிக்கும்போது அவருக்கு வெற்றியாகக் கூட அமைந்து இருக்கலாம். அதனால் சூர்யா மிஸ் பண்ணி விட்டார் என்றும் சொல்லலாம். லோகேஷ் இயக்கத்தில் கமல் தயாரிக்க ரோலக்ஸ் படம் வர வாய்ப்புகள் இருக்கு. சமீபகாலமாக நாம யாரு? நம்ம ஸ்தானம் யாருன்னு கணிக்கிறதுல அவர் தவறி விட்டாரு.

தன்னை ஒரு அஜித்தா, விஜயா நினைக்கிறாரு. அதுதான் அவரோட வீழ்ச்சிக்குக் காரணம். நம்ம மார்க்கெட் இதுதான். நமக்கு மேல தான் விஜய், அஜித் இருக்காருன்னு நினைக்கணும். சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு புறநானூறு படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது.

அவரே தயாரிப்பதாகவும் இருந்தது. படத்தின் கதையை மாற்றச் சொல்லி நெருக்கடி கொடுத்தார். அவர் மாற்ற முடியாதுன்னு சொல்லவே அந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு பராசக்தி என்ற பெயரில் படமாக வந்தது. மேற்கண்ட தகவலை பிரபல வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top