Connect with us

Cinema News

வாழ்க்கையில உங்களுக்கு எல்லாமே பிளாக்பஸ்டர் ஆகட்டும் தளபதி!.. வெயிட்டா வாழ்த்திய விக்னேஷ் சிவன்!..

இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நடிகர் விஜய்க்கு பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்த்தியுள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான நடிகர் விஜய் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் பூவே உனக்காக, பகவதி, துள்ளாத மனமும் துள்ளும், திருமலை, கில்லி, சச்சின், போக்கிரி, வில்லு, நண்பன், ஜில்லா, தலைவா, தெறி, மெர்சல், பிகில், மாஸ்டர், லியோ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக விளங்குகிறார்.

கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நிகழவிற்கும் தேர்தலில் போட்டியிட உள்ளார். இது வரை 68 படங்களை நடித்து முடித்த விஜய் தனது 69வது படத்துடன் திரைத்துறையிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருந்தார். மேலும், அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஜனநாயகன் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் மகனுடன் நடிகர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படத்தை ஷேர் செய்து, அன்பான நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், சுற்றியுள்ள அனைவரிடமும் இருந்து இவ்வளவு அன்பை பெருவது எளிதல்ல, நீங்கள் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட மனிதர், சக மனிதர்களுக்கு அன்பை திருப்பி தர தேர்ந்தெடுத்த உங்களின் நோக்கமும், உங்களின் கடின முயற்சி மற்றும் உழைப்பும் ஒரு பெரிய ப்ளாக்பஸ்டராக மாறட்டும், ஜனநாயகன் படத்திற்கும் இன்னும் பல படங்கள் வருவதற்கும் என் வாழ்த்துக்கள் என்ற பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top