ஜனநாயகன் விஜயின் கடைசி இல்ல… நம்மள ஏமாத்திட்டாங்கப்பா… மமிதா பைஜு சொன்ன சூப்பர் நியூஸ்

Published on: August 8, 2025
---Advertisement---

JanaNayagan: விஜய் நடிப்பில் உருவாக்கும் கடைசி திரைப்படம் ஜனநாயகன் என எண்ணப்பட்டு வரும் நிலையில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பால், நடனத்தால் தனக்கென தனி கோட்டையை உருவாக்கியவர் தளபதி விஜய். ஆரம்பத்தில் அப்பாவின் படத்தில் மட்டுமே நடித்தவர். பின்னர் ரசிகர்களால் அடையாளம் பெற்றார். தொடர்ச்சியாக வாய்ப்பு குவிந்தது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் லிஸ்ட்டில் முக்கிய இடம் பிடித்தார். அதிலும் கடந்த சில வருடங்களாகவே விஜயின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு படத்துக்குமே அவரின் சம்பளம் 50 கோடிக்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் அவரின் ஜனநாயகன் படத்துக்கே 275 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு பெரிய இடத்தில் இருக்கும் சமயத்தில் தன்னுடைய கேரியரை உதறிவிட்டு அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கட்சி முதல் தேர்தலை அடுத்தாண்டு எதிர்கொள்ள இருக்கிறது. கட்சியின் கொடி முதல் மாநாடு வரை பலரிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால் இதே வரவேற்பு அரசியலில் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மேலும், தன்னுடைய கட்சியின் அறிவிப்பு வெளியிட்ட போதே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு அரசியல் வாழ்க்கைக்கு முழுமையாக சென்று விடுவேன் எனக் குறிப்பிட்டு இருந்தார். இதனால் ஜனநாயகன் படமே அவரின் கடைசி படமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் மமிதா பைஜி விஜயிடமே ஜனநாயகன் தான் உங்களின் கடைசி படமா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். அதற்கு விஜய், எனக்கும் தெரியலை. தேர்தல் முடிந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்தாராம். இதனால் விஜய் தேர்தலுக்கு பின்னர் நடிக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment