Connect with us

Cinema News

அந்த டிரஸ் போட மாட்டேனு சொன்னதுக்கு ஹீரோ சொன்ன வார்த்தை! சினிமாவை விட்டே ஓடிய பிரகதி

பாக்யராஜ் மூலமாக தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானவர் நடிகை பிரகதி. அவர் நடித்த முதல் தமிழ் படம் வீட்ல விசேஷங்க. இந்த படத்தில் நடித்த தன்னுடைய அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். படப்பிடிப்பின் போது பாக்யராஜ் இடம் நிறைய திட்டு வாங்கி இருக்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார் பிரகதி. இந்த படத்தை தொடர்ந்து பெரிய மருது, சும்மா இருங்க மச்சான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

நடித்த பெரும்பாலான படங்களில் அம்மா கேரக்டர்களிலேயே நடித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தமிழை விட தெலுங்கில் தான் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார் பிரகதி. தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய இருபதாவது வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகள் ஆன நிலையில் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார் பிரகதி.

இந்த நிலையில் சினிமாவை விட்டு தான் விலகியதற்கான காரணம் என்ன என்பதை ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அந்த படத்தின் பெயரை குறிப்பிடாமல் அதுதான் என்னுடைய கடைசி படம். அதில் ஒரு மழை காட்சியில் முதலில் ஒரு சேலையை கொடுத்து மழையில் நனைந்தபடி ஆடச் சொன்னார்கள். அது எனக்கு ஏற்புடையதாக இருந்தது. அதே காட்சியை மறுநாளும் எடுத்தார்கள். அதில் வேறொரு சேலையை கொடுத்து ஆடச் சொன்னார்கள்.

அது எனக்கு உடன்பாடு இல்லை .ஏனெனில் அந்த சேலை மிகவும் கிளாமராக இருந்தது. அதனால் இதை கட்டிக்கொண்டு ஆட முடியாது என்று சொன்னேன். அதற்கு அந்த படத்தின் ஹீரோ இயக்குனர் என சுற்றி இருப்பவர்கள் முன்னாடி மிகவும் அவமானப்படுத்தி விட்டார்கள். திட்டினால் கூட ஏற்றுக் கொள்வேன் .ஆனால் கேவலமாக பேசினார்கள். அந்த படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவும் ஒரே ஆள் தான் .

pragathi

pragathi

கேட்க கூடாத வார்த்தை எல்லாம் அந்த ஹீரோ என்னை கேட்டு விட்டார் .அதிலிருந்து இந்த சினிமாவிலேயே இருக்கக் கூடாது என்ற ஒரு முடிவுக்கு வந்து தன்னுடைய இருபதாவது வயதிலேயே சினிமாவை விட்டு விலகி விட்டேன் என பிரகதி கூறி இருக்கிறார். யார் அந்த ஹீரோ எந்த படம் என்பதை பற்றி அவர் வெளிப்படையாக சொல்லவில்லை. இந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் பிரகதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது ..ஆனால் இதை முற்றிலுமாக பிரகதி மறுத்தார். அது மட்டுமல்ல இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையையும் கண்டித்து பேசி இருந்தார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top