Connect with us

latest news

ஓவர் பில்டப் ஏத்தி சோலிய முடிச்சிட்டாங்க!. புளூசட்ட மாறனின் குபேரா விமர்சனம்!…

Kubera Review: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள குபேரா படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. சேகர் கம்முலா படங்கள் மீது எதிர்பார்ப்பு இருப்பதாலும் தனுஷ் பிச்சைக்காரராக நடித்திருப்பதாலும் படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அதோடு, கடந்த சில நாட்களாகவே தனுஷ் உள்ளிட்ட படக்குழு பல ஊர்களுக்கும் சென்று புரமோஷன் செய்தார்கள்.

முதல் காட்சி வெளியான முதலே படம் நன்றாக இருப்பதாகவும், தனுஷ் சிறப்பாக நடித்திருப்பதாகவும் பலரும் சொன்னார்கள். மதியத்திற்கு மேல் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வர துவங்கியது. இந்நிலையில், பெரிய நடிகர்களின் படங்களை விமர்சனம் என்கிற பெயரில் வச்சு செய்யும் புளூசட்ட மாறன் படம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என பார்ப்போம் வாங்க!..

படத்தின் துவக்கம் நன்றாகவே இருந்தது. கார்ப்பரேட் முதலாளிகளின் லைப் ஸ்டைல். ஒரு பிரச்சனையை அவர்கள் அணுகும் விதம் எல்லாம் உண்மைக்கு நெருக்கமாக நம்பும் படி இருந்தது. எப்போது தனுஷ் தப்பித்து ஓடுகிறாரோ அப்போதே படம் படுத்துவிட்டது. அவர் தப்பித்து ஓடினாலும் கதை நகரவே இல்லை. அது ஒரே இடத்தில் அப்படியே நிற்கிறது.

படத்துல பெரிய பிரச்சனையே எந்த ஒரு கேரக்டரையும் சரியா வடிவமைக்கவே இல்லை. குறிப்பா சொல்லணும்னா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் நாகார்ஜுனா நல்லவரா? கெட்டவரா? என அவருக்கே தெரியல. அவரே குழப்பத்தில் இருக்கிறார். அதேபோல், தனுஷ் அறிவாளியா? முட்டாளா? என்பதும் தெரியல. அவரின் நோக்கம் என்ன என்பதும் புரியல. ராஷ்மிகா கேரக்டர் எதுக்குன்னே தெரியல.

படத்துல ஒழுங்கா இருக்கிறது வில்லன் கேரக்டர் மட்டும்தான். அவனையும் கூப்பிட்டு பிச்சைகாரன்னா என்னென்னு தெரியுமா.. ஒரு நாள் பிச்சைக்காரனா இருந்து பார் என சொல்லி அந்த கேரக்டரையும் கேவலப்படுத்திட்டாங்க. கார்ப்பரேட்ல எப்படி ஊழல் பண்றாங்க, தனுஷ் எப்படி கம்பு சுத்தபோறார்னு பார்த்தா பிச்சைககாரங்களை பத்தி படம் 3 மணி நேரம் படம் எடுத்து வச்சிருக்காங்க..

‘போய் வா நண்பா’ பாட்டு கேட்க நல்லாருந்தாலும் ஊரே தனுஷை தேடிக்கொண்டிருக்கும்போது அவர் நடுரோட்ல ஆடிக்கிட்டிருக்கிறார். அதுல என்ன லாஜிக்னு தெரியல. படத்தில் வில்லன் நல்லாவே நடிச்சிருக்கார். நாகார்ஜுனாவும் சொன்னதை சரியா செஞ்சிருக்கார். தனுஷும் நல்லாவே நடிச்சிருக்கார். தனுஷ் சினிமாவுல நல்லாவே நடிப்பார். ஆனால், மேடையில கோட்டை விட்ருவார். என்னதான் பாடி லாங்வேஜ் காட்டி, பிராக்டிஸ்லாம் செஞ்சி தலைவர் (ரஜினி) மாதிரி வாய கோணி பேசினாலும் நம்மாளுங்க அதை கண்டுபிச்சி 4 நாளா மீம்ஸ் போட்டு வெளுத்திக்கிட்டு இருக்காங்க. தலைவர் மாதிரி நல்லா அவர் பயிற்சி எடுக்கணும்.

படத்தோட ஆரம்பத்துல கார்ப்பரேட் கம்பெனி, பெரிய முதலாளி, பிரைவேட் ஜெட், கோடி கோடியா பணம், ஸ்விஸ் பேங்க் என வான வேடிக்கையெல்லாம் காட்டிட்டு கடைசியில குப்பைத்தொட்டியில் படத்தை முடிச்சிருக்காங்க. அதோட சோலி முடிஞ்சது’ என நக்கலடித்திருக்கிறார்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top