Connect with us

latest news

தனுஷுக்கு ராஜ யோகம் தான்!.. இருந்தாலும் ஏகப்பட்ட குறை இருக்கே பாஸ்.. குபேரா விமர்சனம்!..

பல கோடி ரூபாய் சொத்துக்களை கை மாற்ற வேண்டும் என்பதற்காக ஒன்றுமே தெரியாத பிச்சைக்காரர்களை பினாமியாக்கலாம் என்கிற ஐடியா எல்லாம் ஓகே தான். ஆனால், அதை கடைசி வரை மெயின்டெயின் பண்ணாத இடத்தில் தான் படம் பல இடங்களில் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆவது போல தெரிகிறது.

சேகர் கம்முலா எழுதி இயக்கியுள்ள குபேரா திரைப்படம் இன்று வெளியானது. படத்திற்கு பெரிதாக டிக்கெட் புக்கிங் இல்லாத நிலையில், படத்துக்கு ஹைப் இல்லாததே கடைசியில் பெரிய பிளஸ் ஆக மாறியுள்ளது. தனுஷின் நடிப்பை பார்த்த ரசிகர்களுக்கு மனுஷன் இன்னம்மா நடிச்சிருக்காரு என கொண்டாடுகின்றனர்.

ஆனால், ராஷ்மிகா மந்தனாவின் போர்ஷன் மற்றும் அவருக்கு பின்னாடி தனுஷ் ஹட்ச் டாக் போல போகும் காட்சிகள் எல்லாம் படத்திற்கு பெரிய வேகத்தடையாகவே தெரிகிறது.

4 பிச்சைக்காரர்களை வைத்து 40 ஆயிரம் கோடி பணத்தை லஞ்சமாக கொடுக்கும் பணியை நாகார்ஜுனா ஏற்று செய்வதாக கமிட் ஆகி வருவது எல்லாம் ஓகே தான். ஆனால், அவருடைய கதாபாத்திரத்தில் ஏதாவது அண்டர்கிரவுண்ட் ஆபரேஷன் போல பிரில்லியண்ட் ஆன ரைட்டிங்கை சேகர் கம்முலா எழுதாமல் விட்டதும் அவருடைய முடிவும் படத்தை தொங்க விட்டு விடுகிறது.

திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தேவா கதாபாத்திரத்தில் அறிமுக காட்சியிலேயே தனுஷ் ரசிகர்களை திருப்திப்படுத்துகிறார். கொடுத்த காசுக்கு தேவையான பல விஷயங்களை படம் முழுக்க கொடுத்தாலும், கடைசியில் ஏதோ அவசர கதியில் படத்தை முடித்து விட்டது போலவும், பிச்சைக்காரனாக இருக்கும் ஒருவரை பணக்காரன் அத்தனை ஆட்களையும் அரசையும் கையில் வைத்துக் கொண்டு பிடிக்க முடியாமல் தவிப்பது எல்லாம் லாஜிக் மீறல்களாகவே உள்ளன.

இன்னமும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால், தனுஷ் நடித்த நடிப்புக்கும், நாகார்ஜுனா போட்ட உழைப்புக்கும் பலனாக இருந்திருக்கும். வில்லன் ஜிம் சர்ப்பை கடைசியில் பிச்சை எடுக்க விடுவதெல்லாம் ஒட்டவே இல்லை.

குபேரா ரேட்டிங்: 3.25/5

author avatar
Saranya M
Continue Reading

More in latest news

To Top