மன்னிப்பு கேட்காத பெரிய மனுஷன் கமலுக்கு 4 பக்கமும் சுத்தி அடிக்குதே!.. 30 கோடி பட்டை நாமம்!..

Published on: August 8, 2025
---Advertisement---

கமல் பேசிய பேச்சு:

ஒரே ஒரு வார்த்தை தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என கமல் சொன்னதிலிருந்து ஆரம்பமானது பிரச்சனை. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தக் லைஃப் .இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசிய கருத்து பெரிய சர்ச்சையாக மாறியது. கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் இந்த படம் வெளியானது.

படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்:

கிட்டத்தட்ட நாயகன் திரைப்படத்திற்கு பிறகு 38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் கமல் மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்ப கர்நாடகாவில் பெரிய அளவில் இந்த பிரச்சனை வெடித்தது. இதனால் கர்நாடகாவில் இந்த படத்தை வெளியிட தடை செய்தது அங்குள்ள நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் காட்டம்:

இது சம்பந்தமான வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் உச்சநீதிமன்றம் கர்நாடகாவில் படத்திற்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்து இருக்கிறது. அதையும் மீறி படத்தை வெளியிடும் பொழுது யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீதும் வழக்கு தொடரப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. கமல் அவதூறாக பேசியிருந்தால் அவர் மீது அவதூறு வழக்கு அல்லவா தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் கர்நாடக நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் கேள்விகளை கொடுத்து இருக்கிறது.

30 கோடி நஷ்டம்:

அது மட்டுமல்ல கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர் நீதிமன்றத்தின் வேலை கிடையாது. இது அவரை மிரட்டுவதாக கருத்தில் கொள்ளப்படும் என காட்டமான கேள்விகளை கர்நாடகா நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் எழுப்பி இருக்கின்றது. இந்த நிலையில் கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் வெளியாகாததால் 30 கோடி நஷ்டம் அடைந்திருப்பதாக தக் லைப் பட நிறுவனம் வேதனையுடன் தெரிவித்து இருக்கிறது.

ஓடிடி ரிலீஸிலும் பிரச்சினை:

kamal

kamal

இதை பார்த்த பல பேர் 30 கோடி மக்கள் தப்பித்தார்கள் என கிண்டலாக கமண்ட் அடித்திருக்கின்றனர். அந்த அளவுக்கு எதிர்பார்த்த அளவு படம் இல்லை என்றாலும் கர்நாடகாவில் இந்த படம் வெளியாகி இருந்தால் ஓரளவு வசூல் ஏறி இருக்கும் என்பது தான் தக் லைப் பட நிறுவனத்தின் எண்ணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தக் லைஃப்’ படத்தின் ஓடிடி உரிமையினை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 130 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது படத்தின் தோல்வியால், அந்த தொகையினை குறைக்க முடிவு செய்திருக்கிறது. 20-25 சதவீதம் குறைக்க முடிவு செய்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment