Connect with us

எஸ்கேப் ஆன சூர்யா!.. சிம்பு இப்படி மாட்டிக்கிட்டாரே!.. முதல் நாளே வேலையை காட்டிய வெற்றிமாறன்!..

latest news

எஸ்கேப் ஆன சூர்யா!.. சிம்பு இப்படி மாட்டிக்கிட்டாரே!.. முதல் நாளே வேலையை காட்டிய வெற்றிமாறன்!..

STR49: சினிமாவில் படம் இயக்குவதில் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். சில இயக்குனர்கள் என்ன எடுக்க வேண்டும் என்பதை தெளிவாக திட்டமிட்டு படப்பிடிப்புக்கு வருவார்கள். சிலர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த பின் என்ன எடுக்கலாம் என யோசிப்பார்கள். இயக்குனர் பாலாவெல்லாம் அப்படித்தான். அதனால்தான் அவரின் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகினார்.

கே.எஸ்.ரவிக்குமார், ஹரி, சுரேஷ் கிருஷ்ணா போன்ற சீனியர் இயக்குனர்களெல்லாம் படத்தை மிகவும் வேகமாக எடுப்பார்கள் 25 நாட்களில் முழுப்படத்தையும் முடித்த இயக்குனர்கள் எல்லாம் கோலிவுட்டில் இருந்தார்கள். ஆனால், வெற்றிமாறன் இவர்கள் எல்லோருக்கும் நேர் மாறாக இருப்பார்.

ஒரு மாதம் எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்து பார்த்துவிட்டு ‘இது நல்லா இல்லை. வேறு எடுப்போம்’ என சொல்லி தயாரிப்பாளரை கதறவிடுவார். விடுதலை, விடுதலை 2 இந்த இரண்டு பாகங்களையும் எடுக்க அவருக்கு 4 வருடங்கள் ஆனது. வெறும் 8 நாட்கள் நடித்தால் போதும் என சொல்லி விஜய் சேதுபதியை அழைத்து வந்து பல மாதங்கள் நடிக்க வைத்தார். பாதி படம் எடுத்தபின் கதையை மாற்றுவார். அவருக்கு தோன்றுவதையெல்லாம் எடுப்பார். கடைசியில் எடிட்டிங் டேபிளில் பல காட்சிகள் கழிக்கப்படும். விடுதலை 2 படத்திற்காக அவர் எடுத்த ஒரு மணி நேர காட்சிகள் படத்தில் வரவே இல்லை என்கிறார்கள்.

இவர் இப்படி இருப்பதால்தான் வாடிவாசல் படத்திலிருந்தே சூர்யா விலகினார். வாடிவாசல் டிராப் ஆனதும் சிம்புவை வைத்து ஒரு புதிய படத்தை துவங்கியிருக்கிறார் வெற்றி. வட சென்னையை மையப்படுத்தி இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். இப்படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்திருக்கிறது. சென்னை எக்மோரில் உள்ள போலீஸ் மியூசியத்தில் படப்பிடிப்பு நடந்தது.

அங்கு ஒரு நாளுக்கு ஷூட்டிங் நடத்த 15 லட்சம் செலவாகும். காலை முதல் மதியம் வரை காட்சிகளை எடுத்த வெற்றிமாறன் அதை எடிட்டிங் செய்து பார்த்திருக்கிறார். அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. எனவே, காலையில் எடுத்த அதே காட்சிகளை மதியமும் எடுத்திருக்கிறார். இதனால் ஒரு நாளில் எடுக்க வேண்டிய டெஸ்ட் ஷூட் இரண்டு நாளாக மாறியிருக்கிறது. செலவும் 25 லட்சம் வரை அதிகரித்திருக்கிறது.

டெஸ்ட் ஷூட்டிலேயே வெற்றிமாறனை பற்றி சிம்பு புரிந்துகொண்டிருப்பார். சிம்புவோ இந்த படத்தை வேகமாக முடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். ஆனால், அது நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top