Siragadikka Aasai: விஜயாவை வச்சு செய்யும் ரோகிணி பிளான்… இப்படி மொக்க கதை தேவையா இப்ப?

Published on: August 8, 2025
---Advertisement---

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

எமதர்ம வேடம் போட்டு முத்து வந்து மிரட்டி கொண்டு இருக்கிறார். இதை பார்க்கும் அண்ணாமலை டேய் என்னடா முத்து என்ன செய்ற எனக் கேட்க எல்லாரும் அதிர்ச்சியாகி பார்க்கின்றனர். விஜயா கோபமாக பார்க்க முத்துவும் அவரை லுக் விடுகிறார்.

என்னப்பா எல்லாரும் பயந்துட்டு இருக்காங்க எனக் கேட்க என் பையனை எனக்கு தெரியாதா என்கிறார். விஜயா என்னை எப்படி பயமுறுத்தி இருக்கான் பாருங்க எனக் கூறுகிறார். பின்னர் நடந்த விஷயங்களை சொல்ல டிரஸை கொடுத்துட்டு வரேன் டைம் ஆச்சு என்கிறார்.

மீனாவிடம் என்னுடைய நடிப்பு எப்படி எனக் கேட்க நீங்க வந்த போதே எனக்கு தெரிஞ்சிது. நானும் நீங்க நடிக்கிறதை பார்த்துட்டு இருந்தேன். பேசாம கார் ஓட்றதை சைட்டில விட்டுட்டு நடிக்க ஆரம்பிச்சிருங்க என்கிறார்.

அருணுக்கு இந்த பாசக்கயிறை போட்டு இழுக்கணும் எனக் கூற அப்படியெல்லாம் பேசாதீங்க. அடுத்தவங்களை இழுக்கணும் சொன்னா நமக்கு பாவம்தான். புண்ணியம் வராது எனக் கூற நல்லவங்க ஆசைப்பட்டா சேர்த்து வைக்கலாம். கெட்டவங்க ஆசைப்பட்டா சேர்த்து வைக்க வேண்டும் என்பது அவசியமில்லை எனவும் கூறுகிறார்.

விஜயா தூங்கிக்கொண்டு இருக்க அப்போ அவர் கனவில் கதவு தட்டப்பட போய் திறந்து பார்க்க எமன் காளையுடன் நிற்க அவர் பாசக்கயிறை போட்டு இழுக்க விஜயா கீழே விழுந்து விடுகிறார். பின்னர் ஒரு வருடம் கழித்து விஜயா இறந்ததாக காட்ட மகன்கள் சேர்ந்து அப்பாவுக்கு ஒருவரை பார்த்து கட்டி வைக்கிறார்.

அண்ணாமலை தாலி கட்ட போக விஜயா தாலி கட்டாதீங்க கட்டாதீங்க எனக் கத்துக்கொண்டு எழுந்து இருக்கிறார். இதை கேட்டு அண்ணாமலை என்ன ஆச்சு எனக் கேட்க கெட்ட கனவு என்கிறார். தண்ணியை குடிச்சிட்டு படு என படுத்துவிடுகிறார்.

பின்னர் விஜயா சிகப்பு புடவை தேடி எடுத்து கட்டிக் கொண்டு ரூமிற்கு செல்ல அதை மீனா பார்த்து என்ன இவங்க இந்த டைமில் புடவையை மாத்துறாஙக என்கிறார். காலையில் இவர் சிகப்பு புடவை கட்டி இருப்பதை ரோகிணி மனோஜ் பார்க்கின்றனர்.

அந்த முத்து அவனுக்கு தெரியாமையே நமக்கு நல்லது பண்ணி இருக்கான். அதனால் ஆண்ட்டி சாமியார் சொன்னதை கேட்டு சிகப்பு புடவை கட்டி இருக்காங்க என்கிறார். விஜயா கடுப்பில் உட்கார்ந்து இருக்க கனவில் அண்ணாமலை தாலி கட்ட வந்த பெண் கீரை கூடையுடன் வருகிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment