சூர்யாவுக்கு டஃப் கொடுத்த ஏஆர் முருகதாஸ்.. இந்த குத்து குத்துறாரே? வைரலாகும் வீடியோ

Published on: August 8, 2025
---Advertisement---

ஏஆர் முருகதாஸ்:

தீனா படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார் ஏ ஆர் முருகதாஸ். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராசி என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இது சிவகார்த்திகேயனுக்கு 23 வது திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் அந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் தீனா, கஜினி, ரமணா ,துப்பாக்கி போன்ற படங்களின் மூலம் மிகவும் பிரபலமானார் ஏ ஆர் முருகதாஸ்.

விஜய்க்கு மாஸ் படம்:

அதிலும் துப்பாக்கி திரைப்படம் அவருடைய கெரியரையே மாற்றிய ஒரு திரைப்படமாக அமைந்தது. விஜய்க்கும் ஒரு மாஸ் ஆக்சன் திரைப்படமாக மாறியது. அதன் பிறகு ரஜினியை வைத்து தர்பார் என்ற படத்தை இயக்கினார் .அந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. அதிலிருந்து தமிழில் ஏ ஆர் முருகதாஸுக்கு மார்க்கெட் குறைய தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை எடுத்தார்.

மதராசி:

அந்த படம் யாரும் எதிர்பார்க்காத ஒரு தோல்வியை தழுவியது. அப்போதிலிருந்தே ஏ ஆர் முருகதாஸை நெருங்க பல நடிகர்கள் யோசித்தார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் அவருடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என ஆசைப்பட்டு இப்போது மதராசி திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

மகளுடன் குத்தாட்டம்:

இவர்களுடன் இணைந்து விக்ராந்த், டான்சிங் ரோஸ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை பட குழு வெளியிட்டது .அதிலிருந்து இந்த படத்தின் மீது மக்கள் மத்தியில் பெரிய அளவு எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது. இந்த படம் வரும் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கின்றது .

இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் அவருடைய மகளின் பூப்புனித நீராட்டு விழாவை அவருடைய சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் நடத்தி வருகிறார். இந்த விழாவில் தன் மகளுடன் ஏ ஆர் முருகதாஸ் இணைந்து சூர்யா நடித்த ரெட்ரோ படத்தில் வரும் கனிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார் .அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த வீடியோ காண: https://x.com/NanDhanDaBossUh/status/1934468483682808216

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment