கார்ட்டூன் டூ திரைப்படம்… How To Train Your Dragon திரைப்படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம் இங்கே!

Published on: August 8, 2025
---Advertisement---

How To Train Your Dragon: ஹாலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த முக்கிய கார்ட்டூன்களில் ஒன்றான ஹவ் டூ டிரெயின் யுவர் டிராகன் படத்தின் பாசிட்டிவ், மைனஸ் பேசும் திரைவிமர்சனத்தின் தொகுப்புகள்.

2010 ஆம் ஆண்டு வெளியான பிரபலமான அனிமேஷன் திரைப்படமான ‘How To Train Your Dragon’ தற்போது லைவ் ஆக்ஷன் ரீமேக் ஆக திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில், முதன்மையாக அசல் படத்தின் கதையை அப்படியே மறு உருவாக்கம் செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.

வைகிங் சமூகத்தில் பிறந்த ஹிகப் என்ற சிறுவன், மிகவும் புத்திசாலி ஆனால் தன்னம்பிக்கை இல்லாதவன். அவருடைய சமூகத்தில், டிராகன்கள் என்பதை கொடூரமான எதிரிகளாக பார்க்கிறார்கள். அதனால், அந்த டிராகன்களை வேட்டையாடுவது அதன் சமூகத்தின் வழக்கமாக இருக்கிறது..

ஒருநாள் ஹிகப், ஒரு மிகவும் அபாயகரமான டிராகன் வகையான நைட் ஃபூரியை காயப்படுத்துகிறான். ஆனால் அதை கொல்லாமல், இரக்கம் கொண்டு கவனித்து, நட்பாகி விடுகிறான். பின்னர் அந்த டிராகனுக்கு “டூத்லஸ்” என்று பெயர் வைக்கிறான்.

இருவருக்கும் இடையே ஒரு நட்பு உருவாகிறது. இந்த நட்பும், புரிதலும், ஹிகப்பின் வாழ்க்கையையும், அவரது சமூகத்தின் எண்ணத்தையும் முழுமையாக மாற்றி விடுகிறது. அதன்பின், ஹிகப் மற்றும் டூத்லஸ் சேர்ந்து, மனிதர்களுக்கும் டிராகன்களுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர போராடுகிறார்கள்.

இத்திரைப்படத்தின் காட்சி அமைப்புகள், டிராகன்களின் சிஜிஐ, மற்றும் பின்னணி இசை பாராட்டைப் பெற்றுள்ளன. இருந்தாலும் புதிதாக எந்த மாற்றமும் இல்லை. அனிமேஷன் படத்தின் அப்பட்டமான நகல் போலவே அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அனிமேஷன் படத்தின் அதே ஹீரோ போல தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளது அப்ளாஸ் பெற்றுள்ளது. கிளைமேக்ஸில் டிராகன் சண்டை காட்சிகள் பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாமே அப்ளாஸ் ரகம்தான்

ஏற்கனவே தெரிந்த கதை என்பதால் பெரிய அளவில் பரபரப்பாக இருக்காது. இருந்தும் கிராபிக்ஸ், அனிமேஷன் பிடித்தமானவர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக நல்ல அனுபவமாக அமையும்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment