Connect with us

Cinema News

தயவு செஞ்சு இந்த மாதிரிலாம் பேசாதீங்க.. கல்வி விருது விழாவில் விஜய் வைத்த வேண்டுகோள்

விஜய்: இன்று தவெக தலைவர் விஜய் 10, 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார். ஏற்கனவே இந்த கல்வி விருது வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. இன்று மூன்றாவது கட்டமாக விருது வழங்கும் விழாவை சிறப்பித்து நடத்தி வருகிறார் விஜய். முதல் கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

ஐந்தாயிரம் ரொக்கம்:

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நடந்த விழாவில் 84 தொகுதி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் முதலிடத்தை பெற்ற மாணவிகளுக்கு வைரக் கம்மலை பரிசாக வழங்கினார் விஜய். ஒவ்வொரு தொகுதி வாரியாக மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஐந்தாயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

வருங்கால முதல்வர்:

இதனைத் தொடர்ந்து இன்று மூன்றாம் கட்ட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் ஏற்கனவே நடந்த இரண்டாவது கட்ட விழாவில் ஒரு மாணவரின் தந்தை விஜயை புகழ்ந்து பேசி இளைய காமராஜர் என கூறியிருந்தார். அது மட்டுமல்ல வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பற்றியும் இவர்தான் வருங்கால முதல்வர் என்றும் அவருடைய அரசியலைப் பற்றியும் பல பேர் அந்த விருது வழங்கும் விழாவில் பேசிவிட்டு சென்றனர்.

இனிமே அப்படி பேசாதீங்க:

இதை எல்லாம் கருத்தில் கொண்ட விஜய் இன்று நடந்த விழாவில் வேண்டுகோளாக ஒரு விஷயத்தை முன் வைத்தார். அதில் 2026 பற்றியும் என்னை இளைய காமராஜர் என்றும் சொல்ல வேண்டாம். இனிமேல் யாரும் இப்படி பேசாதீங்க. நீங்கள் படித்த பள்ளிக்கூடம், உங்களுக்கு கற்பித்த ஆசிரியர் ஆசிரியை இவர்களை பற்றி மட்டும் பேசுங்கள். அது போதும் என மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொண்டார் விஜய்.

ஜனநாயகன்:

ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விஜய் தற்போது அரசியல் சார்ந்த பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். முழு நேர அரசியல் வாதியாக மாறியிருக்கிறார். அவரின் அரசியல் வருகையை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் நாடு முழுவதும் அரசியல் சுற்றுலா பயணம் செய்ய தக்க நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜய்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top