Cinema News
இப்படி ஒரு தலைக்கணமா? நடிகையை பற்றி கேட்டதற்கு நயன் சொன்ன பதிலை பாருங்க
நயன்தாரா:தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. கேரளாவிலிருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன் தொடர்ந்து விஜய் அஜித் சூர்யா என தமிழில் இருக்கும் டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.
ஸ்டைலான நடிகை:
இவருடைய நடிப்பு ஒரு பக்கம் அனைவரையும் கவர்ந்தாலும் இவருடைய ஸ்டைல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ரஜினியை எப்படி ஸ்டைல் மன்னன் என அழைக்கிறோமோ அதைப்போல நயன்தாரா நடிப்பிலும் சரி அவருடைய அழகிலும் சரி ஒரு ஸ்டைலை பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் குடும்ப பங்கான கேரக்டரில் நடித்து வந்த நயன் பில்லா திரைப்படத்திற்கு பிறகு தான் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார்.
பட்டத்தை துறந்த நயன்:
யாரடி நீ மோகினி திரைப்படம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழ் மட்டுமல்ல தெலுங்கு ஹிந்தி என பிற மொழிகளிலும் நயன்தாரா நடித்து வருகிறார். இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க ஆரம்பித்தனர் ரசிகர்கள். ஆனால் சமீபத்தில் தான் என்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம் என ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த நிலையில் ஒரு நேர்காணலில் நயன்தாரா நடிகைகளை பற்றி குறிப்பிட்டது இப்போது வைரல் ஆகி வருகின்றது.
யாரும் அப்படி இல்லை:
அது 2015 ஆம் ஆண்டு எடுத்த ஒரு நேர்காணல். அந்த சமயத்தில் அவரிடம் இப்ப உள்ள நடிகைகளில் எந்த நடிகை நல்ல கேரக்டர்களில் நடித்து வருகிறார்கள் என கேட்டனர். அதற்கு நயன்தாரா நல்ல கேரக்டர்களில் என்று சொன்னால் யாருமே அப்படி நடிக்கவில்லை என கூறியிருக்கிறார். இதே கேள்வியை த்ரிஷாவிடமும் கேட்டனர். அதற்கு திரிஷா அனுஷ்கா, நயன்தாரா, சமந்தா போன்ற நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு இருக்கிறார்.

தலைக்கனம்:
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் திரிஷாவுடன் நயன்தாராவை ஒப்பிட்டு நயன்தாராவுக்கு எவ்வளவு தலைக்கனம் இருக்கணும்? மற்ற நடிகைகளை அவர் மதிப்பதே கிடையாது என திட்டி வருகின்றனர். ஒரு பேச்சுக்காகவாவது ஏதோ ஒரு நடிகையின் பெயரை குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் எந்த நடிகையுமே நல்ல ரோலில் நடிக்கவில்லை என நயன்தாரா இப்படி கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது.