Connect with us

கமல் படம் பிளாப்!. என் படம் ஹிட்!.. யாருமே பேசல!.. பொங்கும் இயக்குனர்!….

latest news

கமல் படம் பிளாப்!. என் படம் ஹிட்!.. யாருமே பேசல!.. பொங்கும் இயக்குனர்!….

Kamalhaasan: 4 வயது முதலே சினிமா துறையில் இருப்பவர் கமல். அதாவது சினிமாவில் இவரின் அனுபவம் 60 வருடங்களுக்கும் மேல். சிறுவனாக சில படங்களில் நடித்துவுட்டு இடைவெளி விட்ட கமல் டீன் ஏஜில் சில படங்களில் நடித்தார். அதன்பின் பாலச்சந்தரின் இயக்கத்தில் இவருக்கு நல்ல வேடங்கள் கிடைத்தது. கமலை ஒரு நடிகராக மெருகேற்றியது பாலச்சந்தர்தான்.

தமிழ் சினிமாவில் புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தவர் கமல்தான். ஹாலிவுட்டில் என்ன தொழில்நுட்பம் புதியதாக வந்தாலும் அதை தான் நடிக்கும் படங்களில் பயன்படுத்துவது கமலின் வழக்கம். பல கேமராக்களை அப்படி தனது படங்களில் பயன்படுத்தி இருக்கிறார். அதேபோல், கதை சொல்லும் ஸ்டைலில் ஆங்கில படங்களின் பாதிப்பை பார்க்க முடியும்.

இப்போது எல்லோராலும் பார்க்கப்படும் ஓடிடி-ஐ தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்தவரும் இவர்தான். விஸ்வரூபம் படத்தை ஆன்லைனில் பணம் செலுத்தி பார்க்கலாம் என அறிவித்தார். ஆனால், அப்போது அதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அது நடக்கவில்லை. இப்போது ஓடிடி வியாபாரத்தை நம்பியே திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், ஃபிலிம் சுருளில் மட்டுமே திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தது. ஒருகட்டத்தில் டிஜிட்டல் கேமரா வந்தது. அதை முதலில் பயன்படுத்தியவரும் கமல்தான். அவரின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில்தான் முதன் முதலில் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தப்பட்டது. இப்படி இன்னும் சொல்லிகொண்டே போகலாம்.

இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான சேரன் ஒரு முக்கிய தகவலை ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். தமிழ் சினிமாவில் டிஜிட்டல் கேமரா வந்தபோது அதை கமல் சார்தான் முதலில் பயன்படுத்தினார். அதேபோல், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ஒரு படத்தில் பயன்படுத்தினார். நான் தவமாய் தவமிருந்து படத்திற்காக பயன்படுத்தினேன். இந்த 3 படங்களில் வெற்றி பெற்றது என் படம்தான். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

ஆனால், அதை யாருமே பேசுவது இல்லை. பெரிய நடிகர்கள் செய்தால் மட்டுமே இங்கே கவனிக்கப்படுகிறது. என்னைப் போன்ற சிறியவர்கள் செய்வதை யாருமே பாராட்டுவது இல்லை. கமல் சார் இது பற்றி பேச வேண்டும். ஆனால், அவர் பேசுவது இல்லை’ என ஆதங்கப்பட்டிருக்கிறார் சேரன்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top