Connect with us

Cinema News

தாலி சென்டிமென்டில் மணிரத்னம் பண்ணிய அட்டகாசங்கள்… இப்படி எல்லாமா எடுத்தாரு?

நாயகன் படத்தின் அசுர வெற்றிக்குப் பிறகு சுமார் 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல், மணிரத்னம் இணைந்து தக் லைஃப் படத்தை எடுத்துள்ளனர். ஆனால் படமோ சொதப்பல். என்னாச்சு மணிரத்னத்துக்குன்னு தான் கேட்கிறாங்க. இப்போ அவரது படங்களையும் அலச ஆரம்பிச்சிட்டாங்க. ரிசல்டைப் பார்த்தா நமக்கே ஆச்சரியத்தில் வாய் பிளக்கிறது. ஆகா அதென்ன விஷயம்னு கேட்குறீங்களா? வாங்க பார்க்கலாம்.

சில சமயம் சமூகவலைதளங்களில் வரும் கருத்துகளைப் படித்துப் பார்த்தால் ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்களோன்னு எண்ணத் தோன்றும். அப்படித்தான் இந்தப் பதிவும் உள்ளது. அதைப் படித்துப் பார்த்தால் அடடே ஆச்சரியக்குறி என்பது போலவே ஒரு ஆச்சரியம் நமக்கு மேலோங்குகிறது. இப்படி எல்லாமா விமர்சனம் பண்ணுவாங்க… செமயா யோசிச்சிருக்காங்களே என்றும் நமக்கு ஒரு எண்ணம் வருகிறது. சரி. வாங்க. மணிரத்னம் குறித்தும் அவரது படங்கள் குறித்து ஒன்லைனில் என்னென்ன விமர்சனம் பண்ணி வச்சிருக்காங்கன்னு பாருங்க.

தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் அது மௌனராகம். பத்தாவது படிக்கிற ஸ்கூல் பொண்ணுக்குத் தாலி கட்டினால் நாயகன். ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் அது அக்னி நட்சத்திரம்.

இன்னொருத்தர் மனைவிக்குத் தாலி கட்டினால் தளபதி. ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் திருடா திருடா. தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் அது ரோஜா. தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் அலைபாயுதே. இ;ன்னொருவன் தாலி கட்டிய பெண்ணைக் கடத்திக் கொண்டு போனால் ராவணன்.

தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் கடல். தாலி கட்டாமல் ஊருக்கு தெரிய வாழ்ந்தால் ஓ காதல் கண்மணி. தாலி கட்டாமல் குழந்தை பெத்துக்கலாம்னு சொன்னா காற்று வெளியிடை. ஒரு பொண்ணை அப்பனும், மவனும் கரெக்ட் பண்ண ஆசைப்பட்டால் அது தக் லைஃப். இதை எல்லாம் பார்க்கும்போது அப்போ ஆரம்பத்துல இருந்தே மணிரத்னம் தாலி சென்டிமென்ட் படம் எடுக்கிறேன்னு இப்படித்தான் எடுத்துக்கிட்டு இருக்காரான்னு எண்ணத் தோன்றுகிறது.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top