Connect with us

Cinema News

அஜித்தை பார்த்து நம்பியார் சொன்ன வார்த்தை.. இப்ப அது நடந்து போச்சே

பொதுவாக ஒருவரை பார்த்ததும் ஏதாவது ஒரு வகையில் அவரை பற்றிய யூகத்தை நம் மனதில் ஏற்றி வைத்துவிடுவோம். ஒருவேளை அப்படிப்பட்டவராக இருப்பாரோ அல்லது இப்படிப்பட்டவராக இருப்பாரோ என பார்த்த உடனேயே யூகித்துவிடுவோம். அப்படித்தான் பழம்பெரும் நடிகரான எம்.என். நம்பியாரும் அஜித்தை பற்றி வருங்காலத்தில் இப்படித்தான் இந்த பையன் வருவான் என அப்பவே சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக இருந்தவர் நம்பியார். இவரை செல்லமாக நம்பியார் சாமி என்றுதான் அழைப்பார்கள். ஐயப்பன் கோவிலுக்கு பல வருடங்களாக மாலை போட்டு விரதம் இருந்து தரிசித்து வந்தார். குருசாமியாகவே இருந்தார் நம்பியார். இவரை பின்பற்றியே இன்று பெரும்பாலான நடிகர்கள் ஒவ்வொரு வருடமும் ஐயப்பனுக்கு மாலை போட்டு சென்று வருகின்றனர்.

எம்ஜிஆரின் ஆஸ்த்தான் வில்லன் நம்பியார். எம்ஜிஆரின் பெரும்பாலான படங்களில் நம்பியார் இருப்பார். நம்பியார் இல்லையென்றால் அது எம்ஜிஆர் படமே இல்லை என்று சொல்லமளவுக்கு அவருடைய முக்கியத்துவம் அந்தப் படத்தில் இருக்கும். எம்ஜிஆரும் நம்பியாரும் வாளை எடுத்து சண்டை போட ஆரம்பித்துவிட்டால் திரையே கிழிந்து விடும். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை திரையில் காண்பிப்பார்கள்.

ஆனால் நிஜத்தில் நெருக்கமான நண்பர்களாகத்தான் இருந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளை கண்டிருக்கிறார் நம்பியார். விஜயின் படங்களில் தாத்தா வேடத்தில் நடித்திருக்கிறார். பூவே உனக்காக படத்தில் அவருடைய காமெடி ரசிக்கும்படியாக இருந்தது. இந்த மாதிரி ஒரு தாத்தா நம் வீட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல வைத்தார்.

இந்த நிலையில் நம்பியாரின் பேரன் ஒரு பேட்டியில் நம்பியார் அஜித்தை பார்த்து ஒரு வார்த்தை சொன்னார் என்பதை பற்றி கூறியிருக்கிறார். அஜித்தின் ஒரு படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நம்பியார் நடித்தாராம். அப்போது அஜித்திடமும் பேசியிருக்கிறார். வீட்டுக்கு வந்ததும் இன்று ஒரு பையனை பார்த்தேன். அவர் கண் நன்றாக இருந்தது. வருங்காலத்தில் மிக உயர்ந்த இடத்துக்கு வருவான் என்று சொன்னாராம்.

ajith

ajith

இதை கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த ஒரு படப்பிடிப்பில் அஜித்தை பார்த்த போது நம்பியாரின் பேரன் அவர் சொன்னதை சொல்லியிருக்கிறார். உடனே அஜித் ‘அப்படியா. ரொம்ப சந்தோஷம்’ என நம்பியாரை பார்த்த அனுபவத்தை பற்றி அஜித்தும் பேசி சந்தோஷப்பட்டுக்கொண்டாராம்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top