Connect with us

Cinema News

திருமண நாளில் இப்படியொரு தண்டனையா? விக்கியை விக்க வைத்த நயன்தாரா

இன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தனது மூன்றாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நானும் ரௌடி தான், எதற்கும் துணிந்தவன் ,காத்து வாக்குல ரெண்டு காதல் என தொடர்ந்து படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார்.

நானும் ரவுடிதான் படத்துக்கு பிறகு தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதிலிருந்து தொடர்ந்து இருவரும் நண்பர்களாக அதன் பின் காதலர்களாக மாறி பின் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏகப்பட்ட பாதுகாப்புகளுடன் திருமணம் நடந்தது. திரைப்பிரபலங்கள் குடும்ப உறுப்பினர்கள் என திருமணத்தை சிறப்பாக நடத்தினர்.

திருமணத்திற்கு பிறகும் நயன் படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவனும் இப்போது எல்.ஐ. கே என்ற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் தான் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கவேண்டாம் அறிக்கையை வெளியிட்டார் நயன்தாரா. அதுவும் பெரியளவில் ட்ரோல் செய்யப்பட்டது. படங்களில் நடிப்பதை விட பெரும்பாலும் குழந்தைகளுடன் இருப்பதுதான் அதிகமாகவே பார்க்கப்படுகிறது.

அவ்வப்போது குழந்தைகளை அழைத்து வெளி நாடு சுற்றுலா சென்றுவிடுவார் நயன். இன்னொரு பக்கம் பாடி கார்டு மாதிரி விக்னேஷ் சிவனும் சென்று விடுகிறார். இதுவும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இன்னும் ஒரு படம் கூட ரிலீஸாகவில்லை. ஆனால் ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.

nayanthara

nayanthara

இந்த நிலையில் இன்று அவர்களுடைய மூன்றாவது திருமண நாள் என்பதால் குழந்தைகளை அழைத்து ஜாலியாக ட்ரிப் சென்றிருக்கிறார்கள் விக்னேஷ் சிவனும் நயனும். இதில் நயன் மற்றும் குழந்தைகளை ஒரு தள்ளுவண்டியில் உட்கார வைத்து விக்னேஷ் சிவன் ஓட்டுவது மாதிரியான வீடியோ வைரலாகி வருகின்றன.


author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top