Connect with us

latest news

ராடன் மீடியாவின் Kadhalum Katru Mara வெப்சீரிஸ்… அப்படி என்ன இருக்கு இதுல தெரியுமா?

Kadhalum Katru Mara: இளசுகளின் மனதை கவர்ந்த காதலும் கற்று மற வெப் சீரிஸ் எப்படி இருக்கும் என்பது குறித்த பாசிட்டிவ் மைனஸ் பேசும் விமர்சனத்தின் தொகுப்புகள்.

தமிழ் நடிகை ராதிகா சரத்குமாரின் தலைமையில் செயல்பட்டு வரும் நிறுவனம் ராடன் மீடியா. இந்த நிறுவனம் பல வருடங்களாக சீரியல் தயாரித்து வந்தது. ஆனால் தற்போது சீரியல் தயாரிப்பு பணியை நிறுத்தி தன்னுடைய ரூட்டை மாற்றி இருக்கிறது.

அந்த வகையில் தற்போதைய டிரெண்டிங் சீரிஸான காதலும் கற்று மற வெப் சீரிஸை இந்த நிறுவனம் தான் தயாரித்து ரிலீஸ் செய்து வருகிறது. இதில் அன்சாரி, சங்கீதா, தியா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். சிறகடிக்க ஆசையில் சீதா கேரக்டரில் நடித்திருக்கும் சங்கீதா இதில் ஹீரோயின் வேடம் ஏற்று இருப்பதால் ரசிகர்கள் மேலும் வரவேற்பை கொடுத்து இருக்கின்றனர்.

காவ்யா மற்றும் கதிர் என்ற இரு காதலர்கள். காதலி காவ்யாவின் தந்தை செய்த சூழ்ச்சியால் இருவரும் பிரேக்கப் செய்து விட அப்பா, அம்மா எடுத்த முடிவால் கயல் என்ற பெண்ணை கட்டிக்கொள்கிறார். அந்த நேரத்தில் பிரிந்து போன காதலி திடீரென கர்ப்பமாகி விட என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கிறார்.

அந்த நேரத்தில் கதிருக்கு விபத்து நடக்க புது மனைவி அவரை பார்த்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவரே பீர் வாங்கி கொடுத்து பார்க்கும் நிலையில் இருக்கிறார். ஒரு நாள் காவ்யாவுடன் போன் பேசிக்கொண்டு இருக்கும் போது அதை வாங்கி கயல் நான் அவர் மனைவி என்பதை சொல்லி விடுகிறார்.

இதனால் காவ்யாவிற்கு கதிருக்கு திருமணமான விஷயம் தெரிந்து விடுகிறது. காவ்யா மூன்று மாதம் தானே நான் உன்னுடன் இல்லை. அதற்குள் என்னை எப்படி மறந்த எனக் கூறி சத்தம் போட நான் கயலிடம் சொல்லிவிட்டேன் அவள் புரிந்து கொள்வாள். நான் உன்னை தான் விரும்புகிறேன் எனக் கூறி கயலிடம் பிரிவது குறித்து பேச வருகிறார்.

அந்த நேரத்தில் கயலும் தான் கர்ப்பம் என்பதை சொல்ல காத்திருக்க வீட்டுக்கு வரும் கதிர் காவ்யா கர்ப்பம் அவளை என்னால் பிரிய முடியாது எனக் கூறிவிடுகிறார். இதனால் கயல் தன் கர்ப்பத்தை சொல்லாமல் மறைத்து விடுகிறார். காவ்யாவுடன் வந்துவிடும் கதிர் அவரை பார்த்து கொள்கிறார். சிறிது நாள் கழித்து வீட்டுக்கு வரும் கதிரிடம் கயல் பேசுகிறார். காவ்யாவிற்கு மருந்து கூட கொடுக்கிறார். அந்த நேரத்தில் அவர் வழுக்கி விழுந்து ரத்தம் வருகிறது.

அவரை கதிர் மருத்துவமனையில் அனுமதிக்க கயல் கர்ப்பம் என டாக்டர் மூலம் தெரிந்து கொள்கிறார். அதிர்ச்சியாக கதிர் இருக்க அப்போ காவ்யாவுக்கு கால் செய்து கயல் கர்ப்பம் என்பதை சொல்லி விட காவ்யா மருத்துவமனையில் வந்து சத்தம் போடுகிறார். கயல் கர்ப்பத்துக்கு தான் காரணம் இல்லை என கதிர் சத்தியம் செய்கிறார்.

கயலிடம் இதுகுறித்து கேட்க அவர் கொதித்தெழுந்து விடுகிறார். குடிச்சா எதுவும் தெரியாதா என அவரை அடித்துவிட்டு இது உன் பிள்ளை தான் என்கிறார். டாக்டரிடமே அழைத்து போய் அதை நிரூபித்து விடுகிறார். கதிர் தனக்கு காவ்யா தான் வேண்டும் என உறுதியாக இருக்கிறார்.

ஆனால் கதிர் நண்பர் காவ்யா வயித்தில் இருப்பது உன் பிள்ளையே இல்லை. ஒரு சரக்கு பார்ட்டியில் இன்னொரு நண்பர் காவ்யாவிற்கு மயக்க மருந்து கொடுத்து கெடுத்ததாக சொல்லி விடுகிறார்.

இருந்தும் கதிர் காவ்யாவை கல்யாணம் செய்து கொள்ள உறுதியாக இருக்கிறார். ஆனால் போனில் இதை கேட்கும் காவ்யா கயலுடன் அவர் சேர வேண்டும் எனச் சொல்லி பிரிந்து விடுகிறார். பின்னர் கயலும் கதிரும் சேர்ந்து விடுகின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top