விஜயகாந்த் சொன்ன அந்த வார்த்தை… வில்லன் நடிகருக்கோ பெரிய மாற்றம்!

Published on: August 8, 2025
---Advertisement---

தமிழ்த்திரை உலகில் அனைவராலும் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் இருக்கும் வரை இவரது அருமை பலருக்கும் தெரியவில்லை. மறைந்ததும் இவரைப் பற்றிய பல நல்ல விஷயங்கள் தினமும் சோஷியல் மீடியாவில் வந்தவண்ணம் உள்ளன. இன்னொரு விஷயம் என்னன்னா அந்தக் காலத்தில் இவ்வளவு மீடியாக்களும் கிடையாது.அதனாலும் இருக்கலாம்.

விஜயகாந்தைப் பற்றி பெரும்பாலும் பாசிடிவான விமர்சனங்கள் தான் அதிகம் வருகின்றன. அவர் நிஜ வாழ்க்கையில் பலருக்கும் எந்த விளம்பரமும் இல்லாமல் உதவி செய்துள்ளார். இதை அவ்வப்போது சக நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் அவருடன் பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆனந்த்ராஜ். அவரும் விஜயகாந்த் குறித்து ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

ஒருமுறை நானும் விஜயகாந்த் சாரும் ஷூட்டிங் முடிஞ்ச உடனே பிளாட்பார்ம்ல உட்கார்ந்து கொண்டு இருந்தோம். கேரவன் எல்லாம் அப்போ இல்லை. அங்கே பெரிய கூட்டமாக அவருடைய ரசிகர்கள் எல்லாம் வந்துட்டாங்க.

ஒருத்தர் மட்டும் பைக்ல எல்லாரையும் தள்ளுங்க தள்ளுங்கன்னு சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருந்தாரு. ரோட்டை மறைத்து ஷூட்டிங் பண்றீங்களே என்ன பண்றதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

அப்போ விஜயகாந்த் சார், சினிமா பிடிக்காதவர்களுக்கு நம்ம ரொம்ப சாதாரண மனுஷங்க. நம்ம ஒண்ணும் ஆகாயத்தில் இருந்து வரல. நம்ம சாதாரண மனுஷங்கதான். நமக்கு ஆண்டவன் கொடுத்த ஒரு பிச்சை இதுன்னு சொன்னாரு. அப்போ அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என் கண்ணைத் திறந்தது என்கிறார் வில்லன் நடிகர் ஆனந்த்ராஜ்.

விஜயகாந்துடன் இணைந்து ஆனஸ்ட்ராஜ், புலன்விசாரணை, நரசிம்மா, திருமூர்த்தி, மாநகர காவல், செந்தூரப்பூவே, வானத்தைப் போல உள்பட பல சூப்பர்ஹிட் படங்களில் ஆனந்த்ராஜ் நடித்துள்ளார். இவற்றில் ஆனஸ்ட்ராஜ், மாநகர காவல், புலன்விசாரணை படங்களில் ஆனந்த்ராஜ் வில்லத்தனத்தில் தனி முத்திரையைப் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment