கமலுக்கே படத்தை போட்டுக் காட்டாத மணிரத்னம்!.. என்னப்பா சொல்றீங்க!..

Published on: August 8, 2025
---Advertisement---

Thug Life movie: நாயகனுக்கு பிறகு 37 வருடங்கள் கழித்து கமலும், மணிரத்னமும் தக் லைப் படம் மூலம் இணைந்திருக்கிறார்கள். இதுவே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதோடு, முதன் முறையாக சிம்புவும், கமலும் ஒன்று சேர்ந்து நடித்திருக்கிறார்கள். சிம்புவின் படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் வெளியாகியுள்ளது. எனவே, சிம்பு ரசிகர்களும் தக் லைப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

ஆனால், படமோ ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. கமல், சிம்பு ஸ்கிரீன் பிரசன்ஸ் ரசிக்கும்படி இருந்தாலும் படத்தில் கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. எனவே, படத்தில் ரசிகர்களால் ஒன்ற முடியவில்லை. அதோடு, எல்லா காட்சிகளும் யூகிக்க முடிவதே பெரிய மைனஸாக இருக்கிறது.

கமல், சிம்பு இருவரின் கதாபாத்திரமும் அழுத்தமாக இல்லை. நாயகனை தாண்ட வேண்டும் என முயற்சி செய்திருக்கிறோம் என கமல் புரமோஷனில் சொன்னார். ஆனால், இந்த படம் நாயகன் படத்தை தொடக்கூட இல்லை. அந்த படத்தின் கதை, திரைக்கதையில் இருந்த நேர்த்தி தக் லைப்பில் இல்லை என்றே பலரும் சொல்கிறார்கள்.

நேற்று வெளியான இப்படம் தமிழகத்தில் 17 கோடியை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், வெளிநாடுகளில் இப்படம் தமிழகத்தை விட அதிக வசூல் செய்திருக்கிறது. படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த ஞாயிறோடு வசூல் முடிந்துவிடும் என்றே கணிக்கப்படுகிறது.

தக் லைப் படத்தை கமலும், மணிரத்னமும் இணைந்து தயாரித்துள்ளனர். அவர்களுக்கு பல கோடிகள் நஷ்டம் வரலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஒரு முக்கியமான விஷயம் தெரியவந்திருக்கிறது. படம் ரிலீஸுக்கு முதல் நாள்தான் கமலுக்கே முழு படத்தையும் மணிரத்னம் போட்டு காட்டினாராம். அதேபோல், அன்றுதான் சிம்புவும் முழுப்படத்தையும் பார்த்திருக்கிறார்.

படத்தை பார்த்தவுடன் துபாய்க்கு கிளம்பி சென்றுவிட்டார் சிம்பு. இப்போது படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. பணம் போட்ட கமலுக்கே ரிலீஸுக்கு முதல் நாள் படம் காட்டியிருக்கிறார் மணிரத்னம். அதனாலேயே படத்தில் எந்த மாற்றமும் செய்ய வாய்ப்பே இல்லாமல் போயிருக்கலாம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment