Connect with us

latest news

கிளைமேக்ஸ்தான் காரணம்!.. தோல்விக்கு பொறுப்பேற்ற கமல்!.. அட ஓப்பனா சொல்லிட்டாரே!…

Guna Movie: 4 வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன், சினிமாவில் பல துறைகளையும் கற்றுக்கொண்ட கலைஞன் இவர். அதற்கு காரணம் சினிமாவில் அனுபவம் பெற்றவர்களோடு அவருக்கு இருந்து நட்பு. ரஜினி போல கமர்ஷியல் மசாலா படங்களில் நடித்திருந்தால் இவரும் தொடர் ஹிட் படங்களை கொடுத்து பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆகியிருப்பார்.

ஆனால் அவர் ஆசைப்பட்டதெல்லாம் மாற்று சினிமா. தமிழ் சினிமாவில் இருக்கும் வழக்கமான மசாலா பாணியை மாற்றி மலையாள படங்களை போலவும், உலக சினிமாக்கள் போலவும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை உருவாக்க வேண்டும். அதை எல்லோரும் செய்ய வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்தது. இன்னமும் இருக்கிறது.

அதனால்தான் தனது 100வது படமாக ஒரு மசாலா கதையில் நடிக்காமல் ராஜ பார்வை படத்தில் நடித்தார். அதோடு, மகாநதி, குருதிப்புனல், குணா, ஹேராம் போன்ற போன்ற படங்களை செய்து பார்த்தார். தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை மேம்படுத்த வேண்டும் என்பதே பெரிய கனவாக இருக்கிறது.

மேல் சொன்ன படத்தில் குணா கமலுக்கு ஒரு வித்தியாசமான படமாக அமைந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட கமல் தன்னை சிவனாக பாவித்துக்கொண்டு ஒரு பெண்ணை பார்வதி என நினைத்து கடத்திச் சென்று மலை உச்சியில் சிறை வைப்பார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் குணா படத்தின் கதை.

இந்த படத்தில் கமல் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கண்மணி அன்போடு காதலன் பாடல் எவர்கிரீன் ஹிட் பாடலாக அமைந்தது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கமல் குணா படம் பற்றி பேசினார்.

அந்த படத்திற்கு நான் எழுதி வைத்திருந்த கிளைமேக்ஸ் வேறு. ஆனால், ஏஜ் துஜே கேலியே போல் படத்தின் இறுதியில் இருவரும் இறந்துவிடுவது போல காட்டினால் படம் ஹிட் ஆகும் என சொல்லி என்னை வற்புறுத்தி அந்த கிளைமேக்ஸை வைக்க சொன்னார்கள். ஆனால், அது தவறு என பாடம் கற்றுக்கொண்டேன். நான் எழுதிய கிளைமேக்ஸ் காட்சியை வைத்திருந்தால் குணா படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கும்’ என கமல் பேசியிருந்தார்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top