Thug life review: வழக்கமான கதைதான்… ஆனா தரமான சம்பவம்,, தக் லைஃப் டுவிட்டர் முதல் பாதி விமர்சனம்

Published on: August 8, 2025
---Advertisement---

மணிரத்னம் இயக்கிய கேங்ஸ்டர் படம். இது ஒரு அதிரடி ஆக்ஷன் த்ரில்லர். இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

கமல், சிம்பு, அபிராமி, திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் சூப்பர். இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். இன்று வெளியான படத்தின் டுவிட்டர் விமர்சனத்தைப் பார்ப்போம்.

1987ல் வெளியான நாயகன் படத்தைத் தொடர்ந்து கமலும், மணிரத்னமும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். இருவரும் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். இவர்களுடன் ரெட் ஜெயண்ட் மூவீஸ்சும் இணைந்துள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இன்று வெளியாகி உள்ளது. படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், டெக்னீஷியன்களும் படத்திற்காக கடுமையாக உழைப்பைத் தந்துள்ளனர்.

படம் இன்று வெளிநாடுகளில் அதிகாலை 4 மணிக்கே வெளியாகி உள்ளன. தமிழகத்தில் காலை 9 மணி சிறப்புக் காட்சி திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது. படத்தைப் பற்றிய முதல் டுவிட்டர் விமர்சனம் இதுதான்.

தக் லைஃப் யூகிக்கக் கூடிய அளவில்தான் உள்ளது. வழக்கமான கதை. புதிதாக எதுவும் இல்லை. ஒளிப்பதிவு அருமை. பின்னணி இசை சிறப்பு. கமல், திரிஷா காட்சிகள் தேவையற்றவை.

கமலுக்கு இணையாக ரோல் சிம்புவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. கமலின் வளர்ப்பு மகனாக வரும் சிம்பு அவருக்கே வில்லனாக வருவது போல டிரெய்லரில் காட்டப்பட்டது. படத்தில் இருவருக்கும் இடையே நடனமும், பைட்டும் சிறப்பாக இருப்பதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கல்ட் கிளாசிக் படம். ஸ்டைலாகத் தொடங்குகிறது. சில நிமிடங்களுக்கு வழக்கமான பாதையாகவே கதை நகர்கிறது. கமல் தரமான சம்பவத்தை வழங்கி உள்ளார். சிம்பு கேங்ஸ்டராக அதிர வைக்கிறார்.

இன்டர்வல் பிளாக்க மிஸ் பண்ணிடாதீங்க. பிரிச்சி எடுத்துருக்காரு தலைவன் என்றும் டுவிட்டர் விமர்சனம் வந்துள்ளது. மீண்டும் இளம் கமலைப் பார்க்க முடிகிறது. கல்ட் கிளாசிக் அனுபவத்தைத் தருவதாகவும் பலரும் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment