Connect with us

Cinema News

கடைக்குட்டி சிங்கம் இவர்தானா? மகனின் பிறந்த நாளையொட்டி SK பகிர்ந்த அழகான புகைப்படம்

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்த வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது தனது மூன்றாவது மகனின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதுவும் தன் மகனின் முதல் பிறந்தநாள் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் ஆங்கராக பல ஆண்டுகள் பணிபுரிந்து அதன் மூலம் ரசிகர்களின் செல்வாக்கை பெற்ற சிவகார்த்திகேயன் மூணு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தார் .அந்த படத்தில் தனுஷுக்கு நண்பராக நடித்திருப்பார் .சந்தானத்தை எப்படி சினிமாவில் சிம்பு அறிமுகம் செய்து வைத்தாரோ அதைப்போல சிவகார்த்திகேயனையும் சின்னத்திரையில் இருந்து சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது தனுஷ்.

அந்த படத்தில் அவருடைய ஹியூமர் அனைவருக்கும் பிடித்தபோக சிவகார்த்திகேயனுக்கு என தனியாக ஒரு நகைச்சுவையை கலந்த படம் வந்தால் நன்றாக இருக்கும் என யோசித்து தனக்கு தெரிந்த சில இயக்குனர்களிடம் தனுஷ் சிவகார்த்திகேயனுக்காக பரிந்துரை செய்தார். அப்படி வந்த படம்தான் மெரினா. அதன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன்.

அதிலிருந்து தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,ரஜினி முருகன், சீமராஜா என பல படங்களில் தனது ஹியூமர்ஸ் சென்சை வெளிப்படுத்தி மக்களின் பேராதரவை பெற்ற சிவகார்த்திகேயன் சினிமாவில் ஹியூமர் மட்டும் இருந்தால் போதாது ஆக்ஷன் இருக்க வேண்டும் என நினைத்து ஆக்சன் ஓரியண்டெட் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி வந்ததுதான் ஹீரோ திரைப்படம்.

sivakarthikeyan

sivakarthikeyan

அதில் இருந்து காக்கி சட்டை என இப்போது வரை ஒரு ஆக்சன் ஹீரோவாக ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது பராசக்தி திரைப்படத்திலும் மதராசி திரைப்படத்திலும் நடித்து வருகிறார் .இந்த நிலையில் அவருடைய மூன்றாவது மகன் பவனின் முதல் பிறந்தநாள் இன்று. அதனால் தனது மனைவி மகனுடன் இருக்கும் அழகான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top