Connect with us

கோபத்துல வந்த வார்த்தை.. இப்படி ஹிட்டாகும்னு நினைக்கல.. வைரமுத்து சொன்ன தகவல்

latest news

கோபத்துல வந்த வார்த்தை.. இப்படி ஹிட்டாகும்னு நினைக்கல.. வைரமுத்து சொன்ன தகவல்

வைரமுத்து மணிரத்னம் ஏ ஆர் ரகுமான் இவர்கள் கூட்டணி என்றாலே அது ஒரு மேஜிக் தான். இவர்கள் இணைந்து பணியாற்றிய ரோஜா ,பாம்பே, அலைபாயுதே போன்ற பல திரைப்படங்களை குறிப்பிடலாம். வைரமுத்து வரிகளில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன. இந்த நிலையில் பாம்பே திரைப்படத்தில் அமைந்த ஒரு பாடல் எப்படி உருவானது. அதிலுள்ள வார்த்தையை எப்படி உருவாக்கினோம் என்பதை பற்றி வைரமுத்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அந்த படத்தில் அமைந்த எல்லா பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பாடல்கள். இன்றுவரை அந்த பாடல்களுக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். குறிப்பாக மேடை கச்சேரிகளில் பாம்பே படத்தில் அமைந்த கண்ணாளனே பாடலை பாடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சித்ரா குரலில் அந்தப் பாடல் மிகப்பெரிய ஒரு மேஜிக்கை ஏற்படுத்தியது.

அதில் கண்ணாளனே என்ற ஒரு வார்த்தையை கண்டுபிடிக்க மூன்று நாட்கள் ஆனதாக வைரமுத்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். கண்ணாலனே என்ற வார்த்தைக்கு பதிலாக முதலில் என் அன்பனே, என் தேவனே, என் ஜீவனே, என் தெய்வமே என்றெல்லாம் போட்டு பயன்படுத்தி பார்த்திருக்கிறார்கள். ஆனால் எதுவுமே மணிரத்னத்திற்கு புடிக்கவே இல்லையாம்.

அதன் பிறகு தான் வைரமுத்து அதில் உள்ள அடுத்த வரியை ரிப்பீட் செய்தே பார்த்திருக்கிறார். என் கண்ணை நேற்றோடு காணவில்லை என்ற வரியை வைத்து கோபத்தில் கண்ணாளனே என போட்டு பார்த்தேன். அது மணிரத்னத்துக்கும் பிடித்து விட்டது. அப்படித்தான் அந்த பாடலில் உள்ள வார்த்தை உருவானது என வைரமுத்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

vairamuthu

vairamuthu

ஆனால் இந்த ஒரு வார்த்தை வருவதற்கு வைரமுத்து மணிரத்னம் இடையே ஏகப்பட்ட சண்டையும் வந்ததாம். ஆனால் இந்த வார்த்தை பிறந்த பிறகு அந்த சண்டை எல்லாம் எப்படி காணாமல் போனது என்றே தெரியவில்லை. மிகப்பெரிய ஒரு தாக்கத்தையே தமிழ் சினிமாவில் ஏற்படுத்திவிட்டு போனது இந்த பாடல் என வைரமுத்து அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top