Connect with us

Cinema News

ப்ரோ.. இங்க உட்காருங்க! விஜயிடம் இருந்து வந்த குரல்.. ‘ஜனநாயகன்’ செட்டில் தவித்த நடிகர்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். எச்.வினோத் இயக்கத்தில் கேவிஎன் புரடக்‌ஷன் தயாரிப்பில் படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது.இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் மீதுபெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்தப் படம் விஜய்க்கு கடைசி படம் என்பதால் எப்படிப்பட்ட கதையாக இது வர போகிறது என்பதை பார்க்கவே ஆர்வமாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் தெலுங்கில் பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டாலும் விஜய்க்காக கதையில் சில மாற்றங்களை செய்திருப்பார்கள். அதனால்தான் இந்தளவு எதிர்பார்ப்பு. இந்தப் படத்திற்கு பிறகு விஜய் முழு நேர அரசியல் வாதியாக செயல்பட போகிறார். இப்போதே அது சம்பந்தமான வேலையில் ஈடுபட்டு வருகிறார் விஜய் .இன்று பனையூரில் கட்சி சேர்க்கை சம்பந்தமான வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கூடவே பிரியாமணி, மமிதா பைஜூ என பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் மமிதா பைஜூவுக்கு ஜோடியாக அசுரன் பட நடிகர் டீஜே அருணாச்சலம் நடித்திருக்கிறார். இதை சமீபத்தில்தான் டீஜே உறுதிப்படுத்தினார். ஆரம்பத்தில் பாடகராக இருந்து பின் அசுரன் படத்தின் மூலம் தான் நடிகராக மாறினார்.

இந்தப் படத்தில் நடிக்கும் போது விஜய் படம் என்பதால் டீஜேவுக்கு ஆரம்பத்தில் சின்ன பயம் இருந்ததாம். பெரிய நடிகர்.. எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பதற்றம் இருந்ததாக கூறினார். அவருடைய காட்சி முடிந்ததும் அமைதியாக உட்கார்ந்து விடுவாராம். அப்படி எல்லாரும் அமர்ந்திருந்த போது அருகில் ஒரு நாற்காலி இருந்ததாம். அதில் உட்காரலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்த டீஜே போய் உட்கார போனாராம்.

உடனே ஓடி வந்த ஒருவர் ‘இது செட் ப்ராபர்ட்டி. உட்காரக் கூடாது’ என சொல்லிவிட்டாராம். அவருக்கு பின்னாடி உட்கார்ந்து இதை கவனித்துக் கொண்டிருந்த விஜய் ‘ப்ரோ.. கம் அண்ட் சிட் ஹியர்’ என சொல்ல இவருக்கு ஒரே நடுக்கமாம். ஏனெனில் விஜயை சுற்றி காவலர்கள் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் விஜய் சொன்ன பிறகு என்ன என நினைத்து அவர் அருகில் போய் உட்கார்ந்தாராம்.

teejay

teejay

பின் டீஜேவை பற்றி எல்லாவற்றையும் விசாரித்த விஜய் அதன் பிறகு விஜயுடன் நன்றாக பேச ஆரம்பித்துவிட்டாராம் டீஜே. இப்போது ஒரு மணி நேரம் ஆனாலும் விஜயுடன் தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என டீஜே கூறினார்.

Continue Reading

More in Cinema News

To Top