OTT Watch: பிரித்விராஜ், கஜோல் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான சர்ஜமீன் திரைப்படத்தின் பாசிட்டிவ், மைனஸ் பேசும் முழு திரைவிமர்சனம் இங்கே!
கடமைக்கு கட்டுப்பட்ட அப்பா, தடம் மாறும் மகன்கள் கதை எப்போதுமே தமிழ் சினிமாவில் ஹிட் அடிக்கும் என்ற அடிப்படையான அஸ்திவாரத்தை வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் சர்ஜமீன். இப்படத்தினை இயக்குனர் கயோஸ் இரானி இயக்கி இருக்கிறார்.
ராணுவ அதிகாரியான பிரித்விராஜ், மனைவி கஜோலுக்கு ஒரே மகன். ராணு அதிகாரியின் மகனாக வளர்க்கப்பட்ட பிரித்விராஜ் அதே கடுமையுடன் தன் மகனிடம் நடந்து கொள்கிறார். ஒருக்கட்டத்தில் மகன் காணாமல் போஇ பல ஆண்டுகள் கழித்து திரும்பி வருகிறார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணிபுரிந்த நேரத்தில் அவர் மகன் திடீரென கடத்தப்பட்டதால் பிரித்விராஜ் தன் மகனை அவரை போராடி மீட்டும் வருகிறார். இந்த நேரத்தில் மகன் தீவிரவாதியாகி மாறி இருப்பது தெரியவர கடமை தவறாத அப்பா எடுக்கும் முடிவுதான் கதை.
அப்பாவாகவும், ராணுவ அதிகாரியாகவும் பிரித்விராஜ் நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார். தேவையான இடங்களில் எமோஷனல் மற்றும் கம்பீரத்தை அவர் காட்டும் போது நமக்கே மெய் சிலிர்க்க வைக்கிறது. 90ஸ் கஜோலை பல இடங்களில் பார்க்க முடிகிறது.
அம்மாவாகவும், மனைவியாகவும் அவர் தன்னுடைய நடிப்பிற்கு தனி அடையாளம் கொடுத்து இருக்கிறார். சில இடங்களில் வசனமே இல்லாமல் அவர் காட்டும் நடிப்பில் மிரள வைக்கிறார். மகனாக வரும் இப்ராஹிம் அலிகான் இன்னும் தேர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மூவரின் நடிப்பும் மிகச்சிறந்ததாக இருந்தாலும் கதை ரொம்பவே அரத பழசாக இருப்பதால் பெரிய அளவில் ஓட்டிக்கொள்ள முடியவில்லை. அதிலும் தமிழில் சூப்பர்ஹிட் அடித்த ஜெயிலர், கோட் படங்களும் இதே கதை என்பதால் தமிழ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பெரிய சுவாரஸ்யத்தை தராது.
ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இப்படம் இந்தியில் இடம்பெற்றுள்ளது. ஆனால் கண்டிப்பாக வார இறுதிக்கு செம எண்டெர்டெயிண்மெண்ட் என்பதில் சந்தேகமே இல்லை.
