Jananayagan: கோட் படத்திற்கு பின் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்க மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், பாபி தியோல் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். தெலுங்கில் பாலையா நடித்து சூப்பர் ஹிட் ஆன பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இது.
அதேநேரம் இந்த படத்தில் வரும் ஒரு காட்சியை மட்டுமே ஜனநாயகன் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என சொன்னார்கள். சிலரோ படத்தின் மையக்கருவை எடுத்து விஜய்க்கு ஏற்றவாறே அரசியலை உள்ளே கலந்திருக்கிறார்கள் என சொல்கிறார்கள். தெலுங்கில் ஸ்ரீலீலா நடித்த வேடத்தில் தமிழில் மமிதா பைஜூ நடித்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.
ஏனெனில் இப்படத்தின் இரண்டு போஸ்டர்களிலும் அரசியல் வாடையே வீசியது. ஒரு போஸ்டரில் தொண்டர்களுக்கு முன் விஜய் சிரித்துக்கொண்டே செல்பி எடுப்பது போலவும், இன்னொரு போஸ்டரில் விஜய் கையில் சாட்டையை வைத்துக்கொண்டிருப்பது போலவும் உருவாக்கியிருந்தனர். அதேநேரம் ஷூட்டிங்கில் விஜய் போலீஸ் உடை அணிந்து கொண்டு நிற்கும் புகைப்படமும் லீக் ஆனது.
இதையெல்லாம் பார்க்கும் போது பகவந்த் கேசரியை எடுக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி படத்தின் படப்பிடிப்பு இன்னமும் முடியவில்லை. விஜய்க்கான காட்சிகளை எடுத்து முடித்துவிட்டனர். ஆனால், மற்ற நடிகர், நடிகைகள் நடிக்கும் சில காட்சிகளை வினோத் எடுத்து வருகிறாராம்.
சமீபத்தில் ஈரோடு, சிவகங்கை உள்ளிட்ட சில ஊர்களில் தேர்தல் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது போன்ற காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். தேர்தல் பற்றிய விழிப்புணர்வாக இந்த காட்சிகள் ஜனநாயகன் படத்தில் இடம் பெறும் என்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ள நிலையில் 2026 பொங்கலுக்கு இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
