
Cinema News
நாங்க கேட்டது ஒன்னு.. ஆனா கிடைச்சது..? 10 ஆண்டுகளில் தலைகீழாக மாறிய கோலிவுட்
இந்திய சினிமா துறையை பொறுத்தவரையில் கோலிவுட்டுக்கு தனி இடம் உண்டு. ஒரு காலத்தில் பாலிவுட் சினிமாவுக்கு பிறகு கோலிவுட் தான் என்று இருந்தது. தென்னிந்திய சினிமா என்றால் அது கோலிவுட் சினிமா தான் என்று சொல்லும் அளவிற்கு அதன் ஆதிக்கம் இருந்தது. ஆனால் தற்போது இந்த நிலைமையை தென்னிந்திய சினிமா துறை மாற்றி உள்ளது.
காரணம் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்கள் தரமான படங்களை கொடுத்து ஆயிரம் கோடி வசூல் கொடுத்து தமிழ் சினிமாவை ஓரங்கட்டியுள்ளது. அவர்களது சினிமாவும் தற்போது உயர்ந்துள்ளது. கோலிவுட்டில் தலைசிறந்த நடிகர்கள் இருந்தும் இன்னும் ஏன் ஒரு படம் கூட ஆயிரம் கோடி வசூலை நெருங்க கூட முடியவில்லை என்பது ரசிகர்களின் பலரின் கேள்வியாக இருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் கூலி படம் அந்த சாதனையை படைக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் கனவாக உள்ளது
ஒரு காலத்தில் எங்கேயோ இருந்த கன்னட சினிமா தற்போது பான் இந்தியா படங்கள் எடுத்து வசூலை வாரிக் குவித்து வருகிறார்கள். ஆனால் தமிலில் எவ்வளவு முயற்சி செய்தாலும் கடைசியாக அதிக வசூலித்த லியோ மற்றும் ஜெயிலர் திரைப்படங்கள் 600 கோடிக்கும் மேல் தாண்ட முடியாமல் திணறி வருகிறது. ரஜினி எந்திரன் திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் ஏன் உலகெங்கும் மிகவும் பிரபலம் அடைந்தார்.
ரஜினிக்கு இந்தியாவில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். குறிப்பாக சீனா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம். இதனால் உலகெங்கும் தமிழ் சினிமாவை கொண்டு சேர்த்த பெருமை ரஜினிகாந்தை சேரும். ரஜினியின் பீக் டைமில் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

காரணம் 1996 இல் இவரால் தமிழக அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதனால் அடுத்த தலைமுறைக்கான அரசியல் தலைவர்களில் ஒருவராக ரஜினி பார்க்கப்பட்டார். இதனால் ரஜினி இனி அரசியலில் கால் பதிப்பார் என்றும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்றும் இனி இவர்தான் பாக்ஸ் ஆபிஸில் ஆட்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு தலைகீழாக மாறி தற்போது 50 வயதில் விஜய் அரசியல் களத்தில் 74 வயதில் ரஜினி பாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வருகிறார்.
இது யாருமே எதிர்பார்க்காத மாற்றம். மற்றொருபுறம் கமல் திமுகவுடன் கூட்டணி வைத்து எம்பியாக பதவியேற்று மக்கள் ஆதரவை பெற்று வருகிறார். மக்கள் எதிர்பார்த்தது ஒன்றாக இருந்தாலும் நடப்பது அதற்கு அப்படியே நேர்மறாக இருக்கிறது. இருப்பினும் மக்களுக்கான நேர்மையான உண்மையான அரசியலை இவர்கள் வழங்குவார்களா என்றும் மாற்று அரசியலுக்கான தேடலில் இவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் இவர்களது ரசிகர்களுக்கு மக்களுக்கும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.