Connect with us
Ajith vs vijay

latest news

உங்க ஃபிரண்ட நான் ஓவர் டேக் பண்ணனும்!.. விஜயின் நண்பரிடம் சொன்ன அஜித்..

Vijay Ajith: தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இருவருமே சமகாலத்தில் வளர்ந்தவர்கள். நடிகர் விஜய் அவரின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் மூலம் சினிமாவுக்கு வந்தார். அஜித்தோ மாடலிங் துறைக்கு போய் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து பின் அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அஜித் துவக்கம் முதலே சாக்லேட் பாய் லுக்கில் பல படங்களில் நடித்து பின்னர் ஆக்சன் ஹீரோவாக மாறினார். விஜய் அவரின் அப்பாவின் இயக்கத்தில் தொடர்ந்து நடித்து பூவே உனக்காக படம் க்ளிக் ஆகி அதன்பின் தொடர்ந்து காதல் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

இருவருமே ஒரு கட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறினார்கள். எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் போட்டி இருந்தது போலவே திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் விஜய் – அஜித் போட்டி உருவானது. விஜய், அஜித் இருவருக்குமே நிறைய ரசிகர்கள் உருவானார்கள். அஜித் பில்லா, மங்காத்தா போன்ற படங்களில் நடித்து மாஸ் நடிகராக மாறினார்.

விஜயும் திருமலை, பகவதி போன்ற படங்களில் நடித்து தன்னை மாஸ் ஹீரோவாக காட்டிக் கொண்டார். ஒரு கட்டத்தில் இருவருக்குமே திரையிலேயே போட்டி உண்டானது. அஜித் தனது படத்தில் விஜயை திட்டுவது போல பாடல்களை வைத்தார். விஜயோ அஜித்தை விமர்சிப்பது போல வசனங்களை வைத்தார்.

vijay-ajith

ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பெரும்பாலானவர்கள் பயன்படுத்த தொடங்கியதும் அதிலும் விஜய் அஜித் ரசிகர்கள் சண்டை போட துவங்கினார்கள். விஜயை அசிங்கப்படுத்துவது போல அஜித் ரசிகர்கள் ஹேஷ்டேக் வைத்து ட்ரெண்டிங் செய்வதும் அஜித்தை அசிங்கப்படுத்தவது போல விஜய் ரசிகர்கள் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்டிங் செய்வது என ட்விட்டரையே சண்டை போடும் களமாக மாற்றினார்கள்.

இப்போது வரை அது தொடர்ந்து வருகிறது. அதே நேரம் விஜயின் உயரத்திற்கு அஜித்தால் செல்ல முடியவில்லை என்பதே நிஜம். அஜித்தின் படங்களை விட விஜய் படங்கள் அதிக வசூல் செய்யும். அதே போல் அஜித்தை விட விஜய் பல கோடிகள் அதிக சம்பளம் வாங்கி வருகிறார்.

விஜய்க்கும் அஜித்திற்கும் இடையே இருக்கும் சம்பள வித்தியாசம் 50 கோடிக்கு மேலிருக்கும். அதாவது விஜய் 150 கோடி வாங்கினால் அஜித்தின் சம்பளம் 100 கோடியாக இருக்கும். அஜித் எவ்வளவு முயன்றும் விஜயின் உயரத்தை தொட முடியவில்லை. இந்நிலையில் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பரும் டிவி சீரியல் நடிகருமான சஞ்சய் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முறை அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் பேசிக்கொண்டிருந்த போது ‘உங்க பிரண்ட் விஜய்யை நான் தாண்டனும்’ என அஜித் என்னிடம் சொன்னார்’ என சொல்லி இருக்கிறார்.

Continue Reading

More in latest news

To Top