Biggboss Tamil: பார்வதிக்கு எதிராக பொங்கும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள்… ரெட் கார்ட் கொடுக்கப்படுமா?

Published on: December 5, 2025
---Advertisement---

Biggboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 9 தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது இந்த வாரம் விஜே பார்வதிக்கு எதிராக முன்னாள் போட்டியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருவது வைரல் ஆகி வருகிறது.

 பொதுவாகவே பிக் பாஸ் தமிழ் ரசிகர்களிடம் எப்பொழுதும் பெரிய ஆதரவை பெற்றிருக்கும். ஆனால் இந்த முறை ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களிடம் தொய்வான வரவேற்பை பெற்று வருவதாகவே கூறப்படுகிறது. இதற்கு காரணம் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் தான்.

எதற்கெடுத்தாலும் சண்டை, கூச்சல் குழப்பம் என அவர்கள் செய்வது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இருந்தும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் சீசன் 9 தொடர்ச்சியாக சண்டைகளை சந்தித்து வருகிறது. அதிலும் பார்வதியின் நடவடிக்கைகள் பலரிடமும் கண்டனத்துக்கு உள்ளாக்கி வருகிறது.

அந்த வகையில், இந்த வாரம் கேப்டன் டாஸ்க் நடந்தது. திவ்யா, சபரி மற்றும் பார்வதி கலந்து கொண்ட அந்த போட்டியில் தவறுதலாக பார்வதியின் கண்ணில் அடிபட்டு மோசமான வீக்கத்தை அடைந்தது. இருந்தும் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் தொடர்ந்து விளையாடி வருகிறார்.shivin

இதற்காக பலரும் பார்வதியை பாராட்டி வந்த நிலையில் தற்போது அவர்களுக்கே அவர் செய்த ஒரு செயலால் அதிருப்தி கிளம்பி இருக்கிறது. இந்த வாரம் நடந்த ராஜாங்கம் டாஸ்கின் ஒரு பகுதியாக போட்டியாளர்களுக்கு ஒரு விளையாட்டு கொடுக்கப்பட்டிருந்தது.

கல்லை வைத்து அடுக்கும் அந்த டாஸ்க் மற்றொரு போட்டியாளரான அரோரா தன்னிடம் தவறான செய்கை காட்டியதாக குற்றம் சாட்டியிருந்தார். போட்டியின் போது பார்வதி இதை கூறிவந்த நிலையில் நேற்று மற்ற போட்டியாளர்கள் முன்னும் அவர் இதே குற்றத்தை அவர் முன் வைத்தார்.

ஆனால் அங்கு நடந்த உண்மையான சம்பவத்தை ஆரோரா தெளிவாக தெரிவித்த பின்னர் பார்வதி நான் இதை இங்கு கொண்டு வரவில்லை என பின்வாங்கினார். விஷயத்தை முழுவதுமாக தெரியாமல் அரோரா மீது இப்படி ஒரு குற்றத்தை முன்வைத்த பார்வதிக்கு கண்டனம் எழுந்து வருகிறது.manjari

முன்னால் போட்டியாளரான ஷிவின் மற்றும் மஞ்சரி இருவரும் பார்வதியின் இந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் ஆரோராக்கு தங்களுடைய ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இதை வார இறுதியில் விஜய் சேதுபதி பார்வதிக்கு ரெட் கார்டு கொடுக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment