நடிகருக்கு கதை பிடித்து, இந்த நடிகரை வைத்து படம் எடுக்கலாம் என அந்த இயக்குனரும் நம்பி எல்லாம் சரியாக நடந்து படப்பிடிப்பை முடித்து அந்த படம் வெளியாகி ஹிட் அடிப்பது என்பது ஒரு மேஜிக்தான். எல்லாம் சரியாக அமைந்தால் மட்டுமே ஒரு திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும். அது எல்லா நேரமும் நடக்கும் என சொல்ல முடியாது. இந்த கணக்கு புரியாததால் தான் இன்னமும் பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைகிறது.ஒரு இயக்குனருக்கு பெரிய நடிகரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு வந்தாலும் சில சமயம் அது முடியாமல் போகும்.
தடையற தாக்க, தடம், மிகாமன், விடாமுயற்சி போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி விஜய்க்கு சில கதைகளை சொல்லி இருந்தார். திடீரென விஜய் அழைத்து தமது படத்தை துவங்குவோம் என சொன்னார். ஆனால் அப்போது உதயநிதியை வைத்து ஒரு படத்தை இயக்க கமிட்டாகி இருந்தார் மகிழ் திருமேனி. விஜய் பட வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த படத்தை முடித்துவிட்டு உங்கள் படத்தை இயக்குகிறேன் என மகிழ் திருமேனி உதயநிதியிடம் கேட்க ‘இந்த படத்தை முடித்துவிட்டு நீங்கள் அடுத்த படத்துக்கு போங்க’ என உதயநிதி சொல்லிவிட விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்தார் மகிழ் திருமேனி. அதன்பின் அவருக்கு அந்த வாய்ப்பு அமையவே இல்லை. சினிமாவில் இது பலருக்கும் நடக்கும். நேரம் கூடி வரவேண்டும்.
தற்போது ரஜினியின் 173வது படத்திலிருந்து சுந்தர்.சி விலகியிருக்கிறார். சுந்தர்.சி ஏதேனும் ஒரு கதையை உருவாக்கி சின்ன நடிகர்களை வைத்து படங்களை இயக்கப் போய்விடுவார். அல்லது அவரை ஹீரோவாக நடித்து விடுவார். ஆனால் ரஜினி எந்த இயக்குனரை அழைப்பார் என்பதுதான் இப்போது முக்கிய கேள்வியாக இருக்கிறது. இதற்கு ரசிகர்கள் ஒரு கணக்கு சொல்கிறார்கள்.

இயக்குனர் ஷங்கர் பீல்ட் அவுட்.. மணிரத்தினம் இப்போது ஃபார்மில் இல்லை.. அட்லீயை கூப்பிடலாம் என்றால் அவர் அல்லு அர்ஜுன் படத்தில் பிஸியாக இருக்கிறார்.. வெங்கட் பிரபுவை சிவகார்த்திகேயன் படத்தை இயக்கும் வேலையில் இருக்கிறார்.. சிறுத்தை சிவாவை யோசித்தால் அண்ணாத்த நினைவுகள் ரஜினிக்கு வரும். கங்குவா படமும் படுதோல்வி..
கார்த்திக் சுப்புராஜ் ஒரே மாதிரி படங்களை எடுக்கிறார்.. முருகதாஸை கூப்பிடலாம் என்றால் தர்பார் நினைவுக்கு வரும். பா.ரஞ்சித்தை யோசித்தால் அவருடன் மூன்றாவது படத்திற்கு வாய்ப்பே இல்லை.. தேசிங்கு பெரியசாமியை இனிமேல் கூப்பிட முடியாது.. நெல்சனையும் அழைக்க முடியாது.. ஏனெனில் ஜெயிலர் 2 ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. அதோட ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள படத்தை அவர்தான் இயக்குகிறார்.. லோகேஷ் கனகராஜ் கூப்பிடலாம் என்றால் ரத்தம் தெறிக்கும் கதையோடு வருவார்..
இப்படி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் யாரையும் ரஜினி இப்போது கூப்பிட முடியாது. கே.எஸ்.ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா போன்ற சீனியர் இயக்குனர்கள் அல்லது அறிமுக இயக்குனர்களை அழைத்து கதை கேட்டு ரஜினி படம் பண்ணலாம் என புள்ளி விவரம் போட்டு பங்கம் பண்ணுகிறார்கள் ரசிகர்கள்.
