ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகிறது என பார்ப்போம்.
இந்த வாரம் 4 படங்கள் வெளியானாலும் அதில் 2 படங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதில் ஒன்று காந்தா. பழம்பெரும் தியாகராஜ பகவாதர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதில், துல்கர் சல்மான், ராணா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா என 5 மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு நல்ல முன்பதிவும் இருக்கிறது.
அடுத்து ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடத்தில் நடித்துள்ள The Girlfriend திரைப்படமும் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகாவுக்கு தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகிறது.

அடுத்து, பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கும்கி 2 படம் இந்த வாரம் வெளியாகிறது. பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் 13 வருடங்கள் கழித்து இப்போது 2ம் பாகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படத்தில் மதியழகன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். மேலும், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். மேலும், ஆனந்தராஜ் நடித்த மெட்ராஸ் மாஃபியா கம்பெனி உள்ளிட்ட சில சின்ன படங்களும் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகவுள்ளது.