காது கேட்காதுன்னு சொன்ன ரசிகர்! உடனே AK பண்ண விஷயம்

Published on: December 5, 2025
---Advertisement---

தனது கார் ரேஸின் முதல் சீசனை முடித்த அஜித் தற்போது தனது அடுத்தகட்ட வேலையை ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் மனைவி மற்றும் மகனுடன் தனது நேரத்தை கழித்தார் அஜித். கேரளா சென்று அங்கு உள்ள பகவதி அம்மனை தனது குடும்பத்துடன் சென்று வழிபட்டார். அப்போது அவரது நெஞ்சில் பகவதி அம்மனை டாட்டூவாக அணிந்திருந்தார் அஜித். அந்த புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வைரலானது.

ஆன்மீகத்தில் மிக நாட்டம் கொண்டவராக அஜித் இருந்து வருகிறார். எப்பொழுதுமே அவர் திருப்பதி சென்று வெங்கடாசலபதியை வணங்குவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்திருக்கிறார். அந்த வீடியோதான் இப்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகின்றது. அவர் மட்டும் வந்து சாமியை தரிசனம் செய்திருக்கிறார்.

அஜித் வெளியிலேயே வரமாட்டார் என்ற டேக் இருந்து வந்தது. ஆனால் சமீபகாலமாக அவர் சார்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள், பேட்டிகள் என ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. அடிக்கடி அஜித் வெளியில் தலைகாட்டி வருகிறார். இந்த நிலையில் இன்று திருப்பதிக்கு வந்த அஜித்தை பார்த்து ரசிகர்கள் சந்தோஷத்தில் கத்தினர். பொது தரிசனத்திற்காக வரிசையில் காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அஜித்தை பார்த்ததும் தல தல என கூக்குரலிட்டனர்.

முதலில் அவர்களை பார்த்து புன்னகை செய்த அஜித் பிறகு ‘அப்படி பண்ணாதீங்க, சாமியை கும்பிடுங்க’ என சைகை மூலமாக எச்சரித்துவிட்டு சென்றார். அதன் பிறகு அஜித்தை பின் தொடர்ந்து வந்த ரசிகரை பார்த்து ‘இது கோயில்.. கொஞ்சம் அமைதியா இருங்க’ என்றும் சொல்லிவிட்டு சென்றார். அதுமட்டுமில்லாமல் திருப்பதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் அஜித் அருகில் வந்து கொண்டிருந்த ஒருவர் தன் குடையை அஜித்துக்காக காட்ட ‘இல்ல வேண்டாம்’ என சொல்லிவிட்டு வேகமாக நடந்து சென்றார் அஜித்.

ajith

அதனை தொடர்ந்து இன்னொரு ரசிகர் தன் மொபைல் போனை நீட்டியபடி செல்ஃபி எடுக்க முயன்ற போது அவரை பார்த்துக் கொண்டிருந்த அஜித், பின் அந்த ரசிகர் ‘என்னால் வாய்பேச முடியாது. காதும் கேட்காது’ என சைகை மூலமாக சொல்ல உடனே அஜித் அந்த ரசிகரின் செல்போனை வாங்கி தானே போட்டோ எடுத்து அந்த ரசிகரிடம் கொடுத்தார். அஜித்தின் இந்த செயல்கள் இணையவாசிகள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

அஜித்தை பொறுத்தவரைக்கும் ரசிகர்கள் அவரவர் குடும்பத்தை கவனித்தால் போதும். அவரவர் குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே அக்கறை காட்ட வேண்டும் என நினைப்பவர். அப்படித்தான் இன்று அவரின் செயலும் இருந்தது.

Leave a Comment