Connect with us
coolie

Cinema News

நம்பி ரஜினி படத்துக்கு போனோம்.. அங்க கதையே வேற.. லோகேஷ் இப்படி செய்யலாமா?.. ஆதங்கத்தில் பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த திரைப்படம் கூலி நேற்று உலகமெங்கும் வெளியானது. படத்தின் முதல் காட்சி முடிந்ததிலிருந்தே அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டது. படம் வருவதற்கு முன் இது ஆயிரம் கோடி அடிக்கும் பல சாதனை படைக்கும் என்று எதிர்பார்ப்புடன் இருந்த அனைவரது கனவிலும் மண்ணள்ளி போட்டது போல் இருக்கிறது என்று மூத்த பத்திரிக்கையாளர் சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன். மேலும் அவர் கூறியதாவது,

”கூலி படம் சுமார் 3 மணி நேரம் ஓடக்கூடியது. இந்த மாதிரியான லென்த்தான படங்களுக்கு எப்போதுமே ஆபத்து இருக்கிறது. பாகுபலி மாதிரியான ஒரு சில படங்கள் மட்டுமே நாம் ரசிக்கும் படியாக இருக்கும். மற்றபடி அனைத்து படங்களும் மிகப்பெரிய சோதனையை நமக்கு ஏற்படுத்தும்.

அந்த வரிசையில் கூலி படமும் இடம்பெற்றிருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு இரண்டரை மணி நேரமாவது வரும் படி படத்தை எடிட் செய்து இருக்கலாம். அடிப்படையில் கதை என்று ஒன்றுமே இல்லை. படம் எடுக்கத் தெரியாதது போல் கதை எழுத தெரியாதது போல் லோகேஷ் செய்திருக்கிறார்”.

”ஏன் இப்படி செய்கிறார்? அவருக்கான இளைஞர் கூட்டம் பெரிது. தமிழ் திரையுலகம் அவருக்கு கொடுத்திருக்கிற அந்தஸ்து என்பது எங்கேயோ இருக்கு. ஆனால் அந்த பொறுப்பே இல்லாமல் கூலி படத்தில் செயல்பட்டு இருக்கிறார். ரஜினி எப்போதுமே மாஸ் தான் அவரை நாம் ஒரு குறையும் சொல்ல முடியாது. அவர் இன்னும் கொஞ்ச நேரம் வந்திருக்கலாம். ஆனால் அவருடைய போஷனை குறைச்சிட்டாங்க. அமீர்கான் எல்லாம் எதுக்கு. அவருக்கு கொடுத்த சம்பளத்துல இன்னும் ரெண்டு படமே எடுத்திருக்கலாம்”.

”ரஜினி படம்னு உள்ள போறோம். அவருக்கான போர்ஷன் இன்னும் அதிகமாக வைத்திருக்க வேண்டும் அதை விட்டுட்டு செளபின் சாஹிர்தான் ஹீரோ மாதிரி ஆயிடுச்சு. கதையே பிளேட்ட திருப்பி போட்ட மாதிரி ஆகிடுச்சு. உண்மையிலே பின்னிட்டாரு. டான்ஸ்,பைட்டு, நடிப்பு என அனைத்திலும் 100 சதவீதம் கொடுத்திருக்கிறார். இவருக்கு இந்த அளவு படத்தில் இடம் கொடுத்ததற்கு ரஜினிக்கு நன்றி சொல்லணும்.

இருந்தாலும் லோகேஷ் இன்னும் நல்லா படம் எடுத்திருக்கலாம். கிடைச்ச வாய்ப்ப தவற விட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்”. என்று கூறியுள்ளார். போற போக்க பார்த்தா இதுக்கு அப்புறம் லோகேஷின் நிலைமை கஷ்டம்தான் போலிருக்கு மற்ற ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Continue Reading

More in Cinema News

To Top