Cinema News
அந்த விஷயத்தில் இளையராஜாவிடம் தோற்ற கமல்…! இப்பதானே சொல்றாரு..!
இளையராஜாவும், கமலும் இணைந்து விட்டால் அந்தப் பாடல் அத்தனை சுவாரசியமாக இருக்கும். இன்றும் 80களில் சூப்பர்ஹிட் இளையராஜா பாடலைப் பட்டியல் போட்டால் அதில் கணிசமாக இருப்பது கமல் பாடல்களாகத் தான் இருக்கும். இளையராஜா கூட எந்த மேடைக் கச்சேரியில் ஏறினாலும் கமல் பாடல்களையே அதிகமாகப் பாடுவார். அவர்களுக்குள் அப்படி ஒரு புரிதல் உள்ளது. அதனாலேயே அந்தளவு அற்புதமான பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
இவர் விருமான்டி படத்துக்குப் பிறகு கமல் படத்துல இசை அமைக்கவில்லை. அந்தப் படத்துலயே வன்முறை அதிகம் என்பதால் இசை அமைக்க மறுத்துள்ளார். ஆனாலும் முழு கதையையும் சொன்ன பிறகு இசை அமைக்க ஒப்புக்கொண்டாராம். அந்த வகையில் கமல் இளையராஜாவிடம் ஒரு விஷயத்தில் தோற்றுப் போனார் என்றே சொல்ல வேண்டும். அட அதையும் அவரே சொல்லிட்டாரே. என்னன்னு பார்க்கலாமா…
ஏஐ பற்றி கமலிடம் ஒரு கேள்வியை விஐடி பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டனர். அதற்கு இந்தக் கேள்விக்கு எங்க ஊருக்கு பக்கத்துல ஒருத்தர் இருக்காரு. அவரு நல்ல பதில் சொன்னாரு. எங்க அண்ணன். இளையராஜா. நான் என்னென்னமோ போய் அங்கே படிச்சிட்டு வந்தபோது நான் என்னென்னவோ சொல்லிக்கிட்டு இருப்பேன். இவரு சொல்றாரு ஏஐ பத்தி. நீங்க எல்லாம் பார்க்குற அதே யூடியூப்ல. நானும் பார்க்குறேன். அதுல அவரு ஒரு பேட்டியில சொல்றாரு.
நானே ஆர்ட்டிஃபீஷியல் இன்டலிஜன்ஸ்தான். இது புதுசா வந்தது. இதுக்கு நான்தான் கத்துக் கொடுத்துட்டு வந்தேன். நான் அதை இந்த மேடையிலதான் சொல்லணும். அவரை நடுவுல பார்க்க முடியல. ‘அண்ணேன் கணபதி மாதிரி பண்ணிட் டீங்களே’ன்ணேன். ‘ஒரே இடத்துல உட்கார்ந்துட்டீங்க.

நான் மயிலேறி சுப்பிரமணியம் மாதிரி ஊரெல்லாம் சுத்திட்டு வந்தேன். பழம் உங்க கையில இருக்கு’. அது அவருக்கு சொல்ற சேதி. இது உங்களுக்கும் சேதி ஆகும் என்று புன்முறுவல் பூக்கிறார் கமல்ஹாசன்.