Parasakthi:  ஏகப்பட்ட பிரச்னைகளுடன் பராசக்தி… ஆனா, பொங்கலுக்கு ரிலீஸ் செஞ்சே ஆகணுமா?

Published on: December 5, 2025
---Advertisement---

Parasakthi: சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் பல பிரச்னைகளை வைத்திருந்தாலும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய பெரிய திட்டமே நடந்து வருகிறதாம். அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. 

அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் கேரியர் உயரந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த மதராஸி படம் கூட நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது. அவருடைய அடுத்த படமான பராசக்தி தயாராகி வருகிறது. 

சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படம் கைவிடப்பட்டது. பின்னர் அதே கதையில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமாகினர். சுதா கொங்கரா இயக்கத்தில் படம் தற்போது பரபரப்பாக தயாராகி வருகிறது. 

Parasakthi:  ஏகப்பட்ட பிரச்னைகளுடன் பராசக்தி… ஆனா, பொங்கலுக்கு ரிலீஸ் செஞ்சே ஆகணுமா?
parasakthi

முதலில் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென டெளன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இதனால் படம் தள்ளிப்போகுமா என கேள்வி எழுந்தது. 

ஆனால் மீண்டும் படத்தை ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தியை களமிறக்க திட்டமிட்டுள்ளனர். அதை தொடர்ந்து தற்போது படத்தினை ஜனவரி 14ந் தேதிக்கு வெளியிட அறிவிப்புகள் வெளிவந்தது மட்டுமல்லாமல் அதற்கான வேலைகளும் நடந்து வருகிறதாம். 

முக்கிய காட்சிகளுக்கு ஒரு படப்பிடிப்பு செட்டை போட வேண்டும் என்ற நிலைமை இருந்ததாம். செட் ஒர்க்கே ஒரு மாதம் நடைபெற்றால் அதற்குப் பின் படப்பிடிப்பு ஒரு மாதம் என இப்படியே சென்றால் படம் பொங்கலுக்கு வெளியிட முடியாது. 

இதனால் இப்போது செட் இல்லாமல் லைவ்வாக படப்பிடிப்பு தளத்தில் நடத்த முடிவெடுத்து, அதற்கான இடத்தினை தேடி ஹைதராபாத்தில் ஒரு இடத்தினை மாற்றாக ஏற்பாடு செய்து விட்டார்களாம். 

அதுமட்டுமல்லாமல் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் பவன் கல்யாண் படத்தில் பிஸியாக இருப்பதால் பராசக்தி படப்பிடிப்புக்கு வர முடியாமல் படப்பிடிப்பு தள்ளிப் போகும் நிலை இருந்ததாம். அதற்காக ரவி.கே.சந்திரன் சொன்ன அவரின் உதவியாளரை வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். 

இப்படி அவசரமாக வேலை செய்தாலும் கூட சிஜி, விஎஃப்எக்ஸ் வேலைகளால் படம் சரியான நேரத்தில் வெளியாகுமா என்ற சந்தேகமே இருக்கிறதாம். இருந்தும் இப்படி அவசர கதிக்கு படத்தினை எடுத்து காலியாகாம இருந்தால் சரி என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment