jananayagan

விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியாகவிருக்கும் திரைப்படம்தான் ஜனநாயகன். தெலுங்கில் ரசிகர்களால் God of Mass என அழைக்கப்படும் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியிருக்கிறது.

இந்த படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளது. அதோடு, விரைவில் படத்தின் செகண்ட் சிங்கிளும் வெளியாகவுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் குறைவான நாட்களே இருப்பதால் ஜனநாயகன் பட வியாபாரமும் சூடுபிடித்திருக்கிறது.

இந்த படத்தின் தமிழக மற்றும் கேரளா உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் 115 கோடிக்கு விலை பேசி 20 கோடி வரை அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். ஆனால், அதன்பின் அவர் பணம் கொடுக்கவில்லை. இதனால் தமிழக உரிமையை பலருக்கும் பிரித்து கொடுத்துவிட்டது கேவிஎன் தயாரிப்பு நிறுவனம். இதனால் கோபமடைந்த ராகுல் நஷ்ட ஈடு கேட்க அவருக்கு கேரள உரிமையை கொடுத்துவிட்டு 5 கோடி திருப்பி கொடுத்துவிட்டனர். மேலும், நஷ்ட ஈடாக 9 கோடியும் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்களாம்.

ஒருபக்கம், தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட் ஆகிய ஏரியாக்களின் உரிமைக்கு தயாரிப்பு நிறுவனம் 35 கோடி சொல்ல, வினியோகஸ்தர்கள் 30 கோடி விலை சொல்கிறார்களாம். எனவே, பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறதாம். விரைவில் தொகை உறுதி செய்யப்படும் எனத்தெரிகிறது.

சிவா
முருகன் 10 ஆண்டுகளாக டிஜிட்டல் செய்தித்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் சினிரிப்போர்டர்ஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.