
சினிமா என்பது போட்டி பொறாமைகளை கொண்ட ஒரு உலகம்தான். இரண்டு நடிகர்கள் சொந்த வாழ்க்கையில் நண்பர்களாக இருந்தாலும் சினிமா என்று வரும்போது அவர்களின் இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று போட்டி போடும். இதை தவிர்க்கவே முடியாது. எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் என எல்லோருக்கும் இது நடந்திருக்கிறது.
நடிகர் விஜய் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு செல்லப் போகிறேன் என்று அறிவித்தபோது விஜயின் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பார் என பலரும் பேசினார்கள். அதை நிரூபிப்பது போல கோட் படத்தின் இறுதிக்காட்சியில் விஜய் தனது துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பது போல ஒரு காட்சி வந்தது. இதை பார்த்ததும் தனது பொறுப்பை அவர் விஜய் இடம் சிவகார்த்திகேயனிடம் விட்டு செல்கிறார் என்ற பலரும் பேசினார்கள். ஆனால். விஜய் சார் 30 வருடங்களாக கடுமையாக உழைத்து இந்த இடத்தை பிடித்திருக்கிறார். அவரிடம் யாராலும் நிரப்ப முடியாது என்று பேசினார் சிவகார்த்திகேயன்.
ஆனாலும், அடுத்த விஜய் ஆக வேண்டும் என்கிற ஆசை சிவகார்த்திகேயனுக்கு இருப்பதாகவும், அவரை திடீர் தளபதி எனவும் புளூ சட்டை மாறன் போன்றவர்கள் சமூகவலைத்தளங்களில் நக்கலடித்து வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் சிவகார்த்திகேயன் மறுத்தாலும் அவர் நடிக்கும் படம் தொடர்பான செய்திகளை பார்க்கும்போது அவர் அடுத்த விஜயாக ஆசைப்படுகிறாரோ என்கிற சந்தேகம் வருறது.
விஜயின் ஜனநாயகன் திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் 14-ம் தேதி சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாகவுள்ளது. அதேபோல் கோட் படத்திற்காக வெங்கட் பிரபுவுடன் விஜய் அமெரிக்காவுக்கு போனார். தற்போது புதிய படத்திற்காக அதே வெங்கட்பிரபுவுடன் அமெரிக்கா போயிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அதேபோல் வருகிற 27ம் தேதி நடக்கும் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா தொடர்பான நிகழ்ச்சி 2026 ஜனவரி 4ம் தேதி தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது. அதேநாளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவிருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும் போது விஜய் சினிமாவிலிருந்து விலகும் நிலையில் அவரின் இடத்தை பிடிக்கவே சிவகார்த்திகேயன் ஆசைப்படுகிறார் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.