
Review
மாஸ் ஆக்சன்… க்யூட் லவ்… மதராஸி படம் எப்படி இருக்கு?.. டிவிட்டர் விமர்சனம்…
Madharasi: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இன்று காலை உலகமெங்கும் வெளியாகியுள்ள திரைப்படம் மதராஸி. அமரன் எனும் சூப்பர் ஹிட்டுக்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் அடுத்த படம் இது. தர்பார் திரைப்படத்திற்கு பின் கடந்த நான்கு வருடங்களாக முருகதாஸ் எந்த படத்தையும் இயக்கவில்லை. இடையில் சல்மான்கானை வைத்து ஒரு படத்தை இயக்கினார். அது பிளாப் ஆகிவிட்டது. எனவே சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்து உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் இந்த படம் இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டாலும் வெளிநாடுகளில் இப்படம் காலை 6:00 மணிக்கு திரையிடப்பட்டது. எனவே படம் பார்த்த பலரும் இப்படம் எப்படி இருக்கிறது என்பதை டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள் அது பற்றி பார்ப்போம்.

படத்தில் இடம்பெற்றுள்ள காதல் மற்றும் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. அதுவே படத்தின் பலம். படத்தில் இரண்டாம் பாதியில் யூகிக்கக்கூடிய காட்சிகள் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. சிவகார்த்திகேயனும் ருக்மணியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சில காட்சிகளில் சிவகார்த்திகேயன் அசத்தலாக நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு அசத்தலாக இருக்கிறது. ஓணம் பண்டிகைக்கு சரியான விருந்து என ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

படத்தின் முதல் பாதியில் நிறைய பாடல்கள் வருவது கொஞ்சம் மைனஸாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். ஆக்சன் விரும்பிகளுக்கு மதராஸி ஒரு சூப்பர் ட்ரீட். இடைவேளை காட்சியும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் ஹைலைட்டாக இருக்கிறது. சிவகார்த்திகேயனும் படத்தின் வில்லன் வித்யூத் ஜம்வாலும் அசத்தலாக நடித்திருக்கிறார்கள் என ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

படத்தின் இரண்டாம் பாதியில் பல கூஸ்பம்ப்ஸ் காட்சிகள் இருக்கிறது. குறிப்பாக அந்த ஷேடோ ஃபைட் அசத்தலாக இருக்கிறது. அதேபோல் ருக்மணியை எஸ்.கே காப்பாற்றும் காட்சிகளும் அருமை. எஸ்.கே வேறு மாதிரி உருமாறி இருக்கிறார். எஸ்கே-வும் வித்யூத்தும் மோதும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அனிருத்தின் பின்னணி இசை அசத்தலாக இருக்கிறது. ஆக்சன் விரும்பிகள் மட்டுமல்ல.. எல்லோரும் குடும்பத்துடன் இந்த படத்தை பார்த்து ரசிக்க முடியும் என ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

மதராஸி படத்தில் முருகதாஸ் தனது பெஸ்ட்டை கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் மாஸ் அவதாராக மாறி ஆக்சன் காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார். அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். ஓனம் பண்டிகைக்கு ஒரு சூப்பர் ட்ரீட் என ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.