நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பது ஒருபக்கம் இருந்தாலும் ஒருபக்கம் தனக்கு பிடித்த பைக் ரேஸ், பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்பது என பல விஷயங்களையும் செய்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே அவர் கார் ரேஸில் கலந்துகொண்டு வருகிறார்.
அவரின் டீம் பல வெளிநாடுகளில் நடக்கும் கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வருகிறது. துபாய் போட்டியில் அஜித்தின் டீம் 3வது பரிசையும் வென்றது. அதன்பின் ஐரோப்பிய நாடுகளில் நடந்த போட்டிகளில் அஜித் கலந்துகொண்டார். அதிலும் 3வது பரிசு கிடைத்ததாக சொல்லப்பட்டது.
தற்போது அஜித்தின் டீம் மலேசியாவில் நடந்து வரும் கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறது. இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே அஜித் மலேசியா சென்றார். அங்குள்ள முருகன் கோவிலில் அவர் சாமி கும்பிட்ட புகைப்படங்களும் வெளியானது. மேலும், சில விளம்பர படங்களிலும் அஜித் நடிக்கவிருக்கிறார். அதற்கான ஷூட்டிங்கும் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

மேலும், நடிகர் சிம்பு ஒரு நிகழ்ச்சிக்காக மலேசியா சென்றிருந்தபோது அஜித்தை சந்தித்து பேசினார். இருவரும் சந்தித்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலா மலேசியாவில் கார் ரேஸ் நடக்கும் இடத்திற்கு சென்று அஜித்தை சந்தித்துள்ளார். சிம்புவை போலவே அவரும் கார் ரேஸ் தொடர்பான் டீ-சர்ட் அணிந்திருந்தார்.
இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
