நடிகர் விஜய் கோட் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ‘நான் அரசியலுக்கு போவதால் இதுதான் என் கடைசி திரைப்படம்’ என்று அறிவித்தார். அந்த படத்தின் கிளைமேக்ஸில் விஜய் தனது துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பது போலவும் ஒரு காட்சி வந்தது. எனவே விஜய் தனது இடத்தை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து விட்டு செல்கிறார் என்பது போல ஒரு இமேஜ் உருவானது. இதையடுத்து அடுத்த விஜய் சிவகார்த்திகேயன்தான் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் பேச துவங்கினார்கள்.
ஆனால் ‘நான் அப்படி நினைக்கவில்லை.. விஜய் சார் பல வருடங்கள் உழைத்து பெற்ற இடம் அது. அந்த இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.. எனக்கான படங்களில் நான் நடித்து வருகிறேன்’ என்று பம்மினார் சிவகார்த்திகேயன். ஆனால் அடுத்த விஜய் ஆகும் ஆசை சிவகார்த்திகேயனுக்கு இருக்கிறது என சினிமா பத்திரிக்கையாளர்கள் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில்தான் 2026 பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் விஜயின் ஜனநாயகன் படத்தோடு மோதவுள்ளது.

ஜனவரி 9ம் தேதி ஜனநாயகனும், ஜனவரி 14ம் தேதி பராசக்தியும் வெளியாவதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகும் செய்திகளை பார்க்கும்போது ஜனநாயகன் வெளியாகும் அதே தேதியில் அதாவது ஜனவரி 9ம் தேதி அல்லது 10ம் தேதி பராசக்தி படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. பராசக்தி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியாகிறது. ஜனவரி 14ம் தேதியில் ஆந்திராவில் பிரபாஸின் ராஜா சாப் மற்றும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் ஆகியோரின் படங்கள் வெளியாவதால் கண்டிப்பாக பராசக்திக்கு தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை. அதனால்தான் இந்த முடிவு என சிலர் சொல்கிறார்கள்.

ஒருபக்கம் விஜயின் கடைசி படத்தோடு நாமும் மோதி நமது படமும் நல்ல வெற்றியை பெற்று விட்டால் கண்டிப்பாக சினிமா வட்டாரத்தில் தனது இமேஜ் உயரும்.. ஒருவேளை ஜனநாயகன் படத்தை விட பராசக்தி படம் அதிக வசூலை பெற்று விட்டால் விஜயை சிவகார்த்திகேயன் தாண்டிவிட்டார் என எல்லோரும் பேசுவார்கள் என சிவகார்த்திகேயன் நினைக்கிறாராம். இன்னும் சொல்லப்போனால் பராசக்தி படம் பொங்கலுக்கு ரிலீஸாக வேண்டும் என்று அந்த தேதிக்கு தயாரிப்பாளரை நோக்கி தள்ளியதும் சிவகார்த்திகேயன்தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
இப்படி நடக்குமானால் கண்டிப்பாக விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு சிவகார்த்திகேயன் ஆளாவார். அவர்கள் அவரை பங்கமாக ட்ரோல் செய்து மட்டம் தட்டுவார்கள்.. அதோடு, பராசக்தி படத்திற்கு எதிராக ட்ரோல் செய்வார்கள். இதையெல்லாம் சிவார்த்திகேயன் சந்திக்க வேண்டும்.
