தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படம் மூலம் அறிமுகம் ஆனவர் அவர். முதல் படமே ஹிட் அடிக்க தொடர்ந்து ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் நடித்தார். அந்த படமும் சூபப்ர் ஹிட. இதையடுத்து முன்னணி இடத்தை பிடித்தார் நயன்தாரா.
விஜய், அஜித், தனுஷ் மர்றும் சிம்பு என முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் நாயகியாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி பெற்றுவந்தார்.
ஒரு கட்டத்தில் கதையின் நாயகியாக நடிக்க தொடங்கினார். இமைக்கா நொடிகள், அறம் என பல படங்களில் நடித்தார். இதில் சில படங்கள் வெற்றியும் பல படங்கள் தோல்வியும் அடைந்தன. தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படம், பால்கிருஷ்ணாவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். நயன்தாராவை பொருத்தவரை தான் நடிக்கும் எந்த படம் தொடர்பான விழாக்களிலும் கலந்துகொள்வதில்லை. ஆனால் தெலுங்கில் அவ்வாறு அவர் நடந்துகொள்வதில்லை. எல்லா விழாக்களிலும் பங்கேற்பார். இவரது இந்த நடவடிக்கைகள் கடுமையான விமர்சனங்களை சந்தித்தன.

இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறுகையில் தமிழில் மட்டுமே அவர் பல கண்டிசன்கள் போடுகிறார். தெலுங்கில் அவ்வாறு நடந்துகொள்வதில்லை. அங்கு அவர் மசாலா படங்களிலேயே நடிக்கிறார். அது மட்டுமல்லாமல் அவரது அந்த கண்டீசன்களை தெலுங்கு ஹீரோக்களே ஏற்க மாட்டார்கள் என்று கூறினார்.
