விஜய்க்கு சப்போர்ட்டாக கூடிய சீக்கிரம் சின்னத்திரையில் இருந்து ஒரு பெரிய பட்டாளமே இணைய போகிறார்கள் என்று சின்னத்திரை நடிகர் ஜீவா ரவி சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் அரசியலில் இறங்கிய பிறகு அவரின் அரசியல் நடவடிக்கை ஒரு சில பேருக்கு உற்சாகத்தை கொடுக்கவில்லை என்றாலும் அவரின் இந்த நிதானமான நகர்வு சில பேரை வெகுவாக ஈர்த்திருக்கிறது.
குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினரின் ரோல் மாடலாக சினிமாவில் இருந்தவர் விஜய். அவர் இப்போது அரசியலில் இறங்கும் போது அந்த ஒட்டுமொத்த தலைமுறையினரின் ஆதரவும் விஜய்க்குத்தான் இருக்கிறது.
அந்த வகையில் சின்னத்திரை நடிகர் ஜீவா ரவி சமீபத்தில்தான் தவெக -வில் தன்னை இணைத்துக் கொண்டார். கூடிய சீக்கிரம் சின்னத்திரையில் இருந்தும் ஒரு பெரிய பட்டாளமே தவெக வில் இணைய இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். அது சின்னத்திரை நடிகர்கள் மட்டும் இல்லை, டெக்னீசியன்கள், இயக்குனர்கள் என அனைவருமே முன் வர இருக்கின்றனர்.
மேலும் அவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களாகவே தவெக வில் இணைய விரும்புகின்றனர். கூடிய சீக்கிரம் தலைவர் முன்னிலையிலும் பொதுச்செயலாளர் முன்னிலையிலும் அது நடக்கும் என்றும் ஜீவா ரவி கூறியுள்ளார்.
