ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். விஜய் தீவிர அரசியலுக்கு சென்று விட்டதால் இது அவரின்ன் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் 2026 தேர்தல் ரிசல்ட்டை பொருத்து விஜய் சினிமாவில் நடிப்பாரா இல்லை அரசியல் நீடிப்பாரா என்பது தெரிந்துவிடும்.
ஜனநாயகம் திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி உங்களுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தில் பூஜா கிட்டே மம்தாஜ் ஆகியோர் முக்கிய இடங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்திருக்கிறார். தெலுங்கில் பாலையா நடித்து வெற்றி பெற்ற பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஜனநாயகன் என்றாலும் தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதையில் பல மாற்றங்களை ஹெச்.வினோத் செய்திருக்கிறார். அதோடு, விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் அரசியல் தொடர்பான காட்சிகளும் படத்தில் இடம் பெற்றிருக்கிறது.
இந்நிலையில்தான், இந்த படத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம் மற்றும் 6 நிமிடங்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. பொதுவாகவே இரண்டே கால் அல்லது இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ரசிகர்களால் தியேட்டரில் அமர முடியாது. அதற்கு மேல் ஓடினால் ‘எப்போது படம் முடியும்?’ என்கிற மனநிலைக்கு வந்துவிடுவார்கள்.
எனவே 3 மணி நேரத்திற்கு மேல் ஓடும் ஜனநாயகன் படத்தில் அந்த ரிஸ்க் இருக்கிறது. அதே நேரம் விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் அதை பொறுத்துக் கொள்வார்கள் என கணிக்கப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்படவிருக்கிறது. அதேநேரம், மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இந்திய நேரப்படி ஜனவரி 9ம் தேதி காலை 8 மணிக்கு வெளியாகும் எனத்தெரிகிறது.
