Padayappa: தலைவா! ‘படையப்பா’ படத்தை பார்த்து ரசித்த சிவகார்த்திகேயன்.. வெறிப்பிடிச்ச ரசிகர் போல

Published on: December 16, 2025
siva
---Advertisement---

Padayappa: ரஜினி நடிப்பில் சக்க போடு போட்ட திரைப்படம் படையப்பா. இந்தப் படத்தை தற்போது ரீ ரிலீஸ் செய்திருக்கின்றனர். அதுவும் ரஜினியின் பிறந்த நாள் ரிலீஸாக இந்தப் படத்தை மறு ஒளிபரப்பு செய்துள்ளனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் ரீ ரிலீஸில் படையப்பா திரைப்படம் வசூல் செய்து வருகின்றது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா.

25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தை ரஜினி ரீ ரிலீஸ் செய்துள்ளார். இதற்கு முன் இந்தப் படத்தை எந்தவொரு சாட்டிலைட்டிற்கோ அல்லது ஓடிடி தளத்திற்கோ கொடுக்காத ரஜினி அப்படியே பாதுகாத்து சரியான நேரம் பார்த்து ரீ ரிலீஸ் செய்துள்ளார். அதற்கேற்ப படமும் இன்றைய தலைமுறையினரிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா என எல்லா மாநிலங்களிலும் படம் வெற்றி நடை போட்டு வருகிறது.

ஏற்கனவே இந்தப் படம் வெளியான போதும் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்தப் படத்தின் கதை திரைக்கதை கூட ரஜினி எழுதியதுதான். ரஜினியை விட நீலாம்பரி கேரக்டருக்குத்தான் பெரிய அளவில் டிஸ்கஷன் நடந்தது. ஐஸ்வர்யா ராயிலிருந்து பல நடிகைகள் பரிந்துரைக்கப்பட கடைசியில் ரம்யா கிருஷ்ணன் தேர்வானார்.

நீலாம்பரிக்கும் படையப்பாவிற்கும் இடையே நடக்கும் போர். படத்தில் மாஸாக காட்டியிருப்பார் ரவிக்குமார். மியூஸிக்கிலிருந்து பிஜிஎம் வரை ஏ.ஆர் ரஹ்மான் தூள் கிளப்பியிருக்கிறார். ஊஞ்சலை ரஜினி கீழே இழுத்து போடும் போது பின்னணியில் ஒலிக்கும் அந்த மியூசிக் மற்றும் மாடிப்படியிலிருந்து கெத்தாக ரம்யா கிருஷ்ணன் கீழே இறங்கும் போது ஒலிக்கும் மியுஸிக் என ஒரே கூஸ் பம்ப்தான்.

ரசிகர்களிலிருந்து பிரபலங்கள் வரை இந்தப் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சிவகார்த்திகேயன் தற்போது படையப்பா படத்தை தியேட்டரில் கண்டுகளித்துள்ளார். ரஜினியின் அறிமுக காட்சி வரும் போது தலைவா என சிவகார்த்திகேயன் ஆர்வத்தில் கத்த ஒரு ரசிகனா இந்தளவு கொண்டாடுகிறாரே என தோன்றுகிறது.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DSURnCkFMDo/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.