இன்று ஈரோட்டில் உள்ள விஜயமங்கலம் கிராமத்தில் தேர்தல் பரப்புரையை ஆற்றிக் கொண்டிருக்கிறார் விஜய். அதற்காக காலையில் சென்னயில் இருந்து புறப்பட்டு கோவை விமானம் வந்தடைந்தார் விஜய். அங்கிருந்து தனது கார் மூலமாக விஜயமங்கலம் வந்து சேர்ந்தார். அவர் வரும் வழியெல்லாம் ரசிகர்கள் தொடர்ந்து உற்சாகம் கொடுத்து வருவதை பார்க்கமுடிந்தது.
விஜயும் காரில் உட்கார்ந்த படியே ரசிகர்களுக்கு கைசைத்தபடியே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நேராக திடலை வந்தடைந்ததும் அவருக்கு செங்கோட்டையன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தேர்தல் பிரச்சார வாகனத்தில் உள்ளே சென்றதும் செங்கோட்டையனும் தேர்தல் பிரச்சார வாகனத்திற்குள் சென்றார். முதலில் மாவட்ட செயாளர் பேச்சை ஆரம்பித்தார்.
அவரை தொடர்ந்து செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் என அவரவர் பேச்சை முடித்துக் கொண்டனர். கடைசியாக இப்போது விஜய் பேசிக் கொண்டிருக்கிறார். எப்போதும் போல ஆளும்கட்சியை கடுமையாக விமர்சித்திருக்கிறார் விஜய். தனது பேச்சை மங்களகரமாக மஞ்சளோடு ஆரம்பித்தார் விஜய். ஈரோடு மஞ்சளுக்கு பேர் போனது. அதனால் மஞ்சள் பற்றி சில விஷயங்களை கூறினார்.
அதனை தொடர்ந்து காளிங்கராயன் அணை பற்றியும் பேசினார். எப்படி அந்த அணை உருவானது என்பது பற்றி கூறினார். அதோடு கொள்ளையடிக்கிற கூட்டம் தான் இங்கு இருக்கிறது. கொள்ளையடிச்ச காசுதான் அவங்களுக்கு துணை. ஆனா எனக்கு உங்கள மாதிரியான மாஸுதான் துணை என்று பேசியிருக்கிறார். விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே ரசிகர் ஒருவர் விளக்கு கம்பத்தில் ஏறி விஜய்க்கு கைசைத்தார்.
அதை பார்த்ததும் விஜய் டென்சன் ஆனார். தம்பி இறங்குப்பா என சொல்ல அந்த ரசிகர் முத்தம் கொடுத்தபடியே அமர்ந்திருந்தார். ஆனாலும் தம்பி உன்னத்தான்.. இறங்குப்பா என கூற அந்த ரசிகர் முத்தமிட்டுக் கொண்டே இருந்தார். இது விஜய்க்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. தம்பி இறங்குனாதான் முத்தம் கொடுப்பேன் என்று கூற, அதன் பிறகே அந்த ரசிகர் இறங்கினார்.
அந்த ரசிகர் இறங்கிய பிறகு சொன்னதை போல விஜய் அந்த ரசிகருக்கு முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
