உங்களுக்கு காசு… எனக்கு மாஸு!.. ஈரோட்டில் தெறிக்கவிட்ட விஜய்!…

ஈரோடு பெருந்துறையில் இன்று தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல நாட்களுக்குப் பின் விஜய் மீண்டும் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். எப்போதும் அக்ரோஷமாக பேசும் விஜய் ஈரோட்டில் இந்த மேடையில் பேசும்போது மிகவும் ஆக்ரோஷமாக பேசினார். வழக்கம்போல் திமுகவை மிகவும்…

ஈரோடு பெருந்துறையில் இன்று தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல நாட்களுக்குப் பின் விஜய் மீண்டும் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். எப்போதும் அக்ரோஷமாக பேசும் விஜய் ஈரோட்டில் இந்த மேடையில் பேசும்போது மிகவும் ஆக்ரோஷமாக பேசினார்.

வழக்கம்போல் திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார். திமுக வாக்குறுதி கொடுத்த எதையும் செய்யவில்லை. 24 மணி நேரமும் தவெகவை எப்படி ஒழிப்பது? விஜயை எப்படி ஒழிப்பது என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் நீங்கள் சம்பாதித்து வைத்த காசுதான் உங்களிடம் இருக்கிறது.. ஆனால் எனக்கு மக்களிடம் மாஸ் இருக்கிறது.. இந்த சத்தத்தை கேளுங்கள் உங்களால் இதை எப்படி கட்டுப்படுத்த முடியும்?… வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு நன்றியோடு இருப்பேன்..

ஈரோடு பல பெருமைகளைக் கொண்டது.. மங்களகரமான மஞ்சள் விலையும் இந்த பூமிக்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திமுகவை கடுமையாக ஒரே வார்த்தையில் விமர்சித்தார்கள். ஏன் இவ்வளவு ஹார்ஸாக பேசினார்கள் என்று நானும் யோசிப்போன். ஆனால் இப்போதுதான் எனக்கு புரிகிறது.. எனவே அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.. திமுக ஒரு தீய சக்தி.. தவெக ஒருரு தூய சக்தி.. மக்கள் என் பக்கம் நிற்பார்கள்.

காஞ்சிபுரத்தில் நான் பேசியதை தப்பு தப்பாக புரிந்து கொண்டார்கள்.. நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை.. ஆனால் இலவசங்களை கொடுத்து மக்களை இழிவு படுத்துவதை எதிர்க்கிறேன்.. மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்த வேண்டும்’ என அவர் பேசினார்.