கன்னட சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் சிவராஜ் குமா. இவர் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மூத்த மகன். பல வருடங்களாகவே சினிமாவில் நடித்து வருகிறார். ஆந்திராவில் பிரபல நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலரும் அரசியலுக்கு வந்தார்கள். ஆனால் கர்நாடகாவில் உச்ச நடிகராக இருக்கும் சிவராஜ்குமார், சுதீப் போன்றவகள் அரசியல் பக்கமே செல்லவில்லை.
சிவ ராஜ்குமார் அரசியல் பக்காம் போகாமல் இருப்பதற்கு காரணம் அவங்க அப்பா ராஜ்குமார் வாங்கிய சத்தியம் என சொல்லப்படுகிறது. நம் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு போகக்கூடாது என அவர் சொல்லியதை இப்போதும் அவரது மகன்கள் பின்பற்றி வருகிறார்கள். சிவ ராஜ்குமார் கடந்த சில வருடங்களாகவே தமிழ் படங்களிலும் நடிக்க துவங்கி விட்டார். ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு கேமியோ செய்திருந்தார். தற்போது உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்திலும் அவர் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் சென்னை வந்த அவரிடம் ‘விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில் நீங்கள் ஏன் வரவில்லை?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் சொன்ன சிவ ராஜ்குமார் ‘முதலில் எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் நான் என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டுதான் இருக்கிறேன்.. அந்த உதவி செய்வதற்கு எனக்கு பவர் தேவை இல்லை.. நான் யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்வேன்.. பாகுபாடு பார்க்காமல் எல்லா மக்களுக்கும் என்னால் உதவி செய்ய முடியும்..
ஆனால் அரசியலுக்கு போயிட்டா அப்படி பண்ண முடியாது.. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் செய்ய முடியும்.. ஆனால் நான் யாருக்கு வேணாலும் பண்ணுவேன்.. அந்த சுதந்திரம் எனக்கு இருக்கு.. யாருக்கும் பயப்பட தேவையில்லை.. யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை.. ஏன்னா அது என்னோட பணம்’ என தெறிக்கவிட்டிருக்கிறார்.
