வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை மிக தைரியமாக எதிர்கொள்ள தயாராகி வருகிறார் தவெக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய். அதற்காக பல யுத்திகளை கையாண்டு வருகிறார். நேற்று சமத்துவ கிறிஸ்மஸ் விழாவில் கலந்து கொண்டு தன்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். இந்த நிலையில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது பற்றி இதுவரை எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.
அவருக்கு தென் மாவட்டத்தில்தான் அதிக செல்வாக்கு இருக்கிறது. அதனால் விருத்தாச்சலம் போன்ற பகுதிகளில் அவர் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என பல கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார். நேற்று நடந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை பார்க்கும் பொழுது ஒட்டுமொத்த கிறிஸ்துவ அமைப்பும் விஜய்க்கு ஆதரவாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது. ஏனெனில் அங்கு வந்திருந்த அனைவருமே அந்த அமைப்பில் பெரிய ஆள்களாகத்தான் இருந்தார்கள்.
கிறிஸ்தவ அமைப்பிற்குள்ளேயே சின்ன சின்ன கிளைகள் இருக்கிறது. அவைகளுக்கெல்லாம் தலைவராக இருப்பவர்கள் தான் நேற்று அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் பேசும்போது கூட இந்த அமைப்பு மட்டுமல்ல இன்னும் பல்வேறு அமைப்புகள் இருக்கிறது. அந்த அமைப்புகளை எல்லாம் நான் விஜய்யுடன் சேர்க்கப் போகிறேன், விஜயை முதல்வர் ஆக்காமல் ஓயமாட்டேன் என்பது போல அந்த மேடையில் சூழுரைத்ததை நம்மால் பார்க்க முடிந்தது. இதற்கிடையில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற கேள்வி இருந்து வருகிறது.
ஒரு பக்கம் மதுரை இன்னொரு பக்கம் கோவை என எந்தெந்த தொகுதிகள் மனதில் படுகிறதோ அதை கூறிக்கொண்டு வருகின்றனர். ஆனால் விஜய் சிறுவயதில் இருக்கும்போது இருந்தே அவருடைய அப்பா சந்திரசேகர் திருவாடனை தொகுதியில் உள்ள ஓரியூர் என்ற ஊருக்கு அழைத்துக் கொண்டு போவாராம். அங்கு தான் விஜய்க்கு மொட்டை அடித்து ஞானஸ்நானம் செய்தார்களாம். அந்தக் கோயிலுக்கு தொடர்ந்து எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா விஜயை அழைத்துக் கொண்டு போவார்களாம். விஜய் ஒரு நடிகராவது வரைக்கும் இந்த பயணம் இருந்திருக்கிறது.
எல்லோருக்கும் தெரிந்த ஒரு பிரபல நடிகராக மாறிய பிறகு தான் அந்த ஊருக்கு இவர்கள் போகவே இல்லையாம். இந்த ஓரியூரில் அப்படி என்ன விசேஷம் என்றால் புனித அருளானந்தர் கொல்லப்பட்ட இடமாம். அது அந்த தென் மாவட்டத்தில் இருக்கிற கத்தோலிக்க மக்களுக்கான ஒரு மிக முக்கிய ஸ்தலமாக அது பார்க்கப்படுகிறதாம். அந்த ஆலயத்திற்கு தான் சந்திரசேகர் ஷோபா விஜய் தொடர்ந்து பயணத்தில் இருக்கிறார்கள். அது திருவாடனை தொகுதி.
அந்த தொகுதியில் தான் விஜய் நிற்பார் எனக் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு விஜய்க்கும் அந்த ஆலயத்திற்கும் இடையே ஒரு சென்டிமென்ட் இருப்பதாக தெரிகிறது. அந்த ஆலயத்திற்கு அழைத்துக் கொண்டு போன பிறகு தான் விஜய் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்து நிற்கிறார் என்றும் கூறுகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் அந்த திருவாடனை தொகுதி இருக்கிறதாம். இங்குதான் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது என அந்தணன் பேசியுள்ளார்.
